MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 'தெறி' கலெக்ஷனை நெருங்க முடியல; தளபதியிடம் பலத்த அடிவாங்கிய 'பேபி ஜான்' முதல் நாள் வசூல்!

'தெறி' கலெக்ஷனை நெருங்க முடியல; தளபதியிடம் பலத்த அடிவாங்கிய 'பேபி ஜான்' முதல் நாள் வசூல்!

'தெறி' படத்தின் ரீமேக்காக நேற்று வெளியான 'பேபி ஜான்' திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. 

2 Min read
manimegalai a
Published : Dec 26 2024, 12:36 PM IST| Updated : Dec 26 2024, 12:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Theri Vs Baby John Collection

Theri Vs Baby John Collection

கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'தெறி'. இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு, தன்னுடைய வி கிரியேஷன்ஸ் நிறுவன மூலம் தயாரித்திருந்த நிலையில், ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். தளபதி விஜய்க்கு ஜோடியாக சமந்தா ருத் பிரபு நடித்திருந்த நிலையில், மற்றொரு நாயகியாக எமி ஜாக்சன் நடித்திருந்தார்.

25
Thalapathy vijay Movie Theri

Thalapathy vijay Movie Theri

ஜார்ஜ் ஸ்ரீவில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருந்த இந்த படத்திற்கு, ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டார். ரூ.75 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட 'தெறி' திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் ரூ.150 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த நிலையில், தன்னுடைய மகளுக்காக எதிரிகளிடம் இருந்து விலகி தன்னுடைய அடையாளத்தை மறைத்துக் கொண்டு வாழும் கதாபாத்திரத்தில் தான் விஜய் நடித்திருந்தார். இந்த படத்தில் விஜய்க்கு மகளாக மீனாவின் மகள் நைனிகா நடிக்க, கேமியோ ரோலில் தளபதி விஜயின் மகள் திவ்யா சாஷா நடித்திருந்தார்.

47 வயதில் அப்பாவாகும் காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி! குட் நியூஸை கியூட்டாக அறிவித்த சங்கீதா!
 

35
Theri movie cast

Theri movie cast

மேலும் இப்படத்தில் ராதிகா சரத்குமார், மகேந்திரன், பிரபு, ராஜேந்திரன், காளி வெங்கட், ஸ்ரீகுமார் , மனோபாலா  சுவாமிநாதன், உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.
 

45
Theri Remake Baby John

Theri Remake Baby John

தற்போது இந்த படத்தின் ரீமேக், ஹிந்தியில் அட்லி தயாரிப்பில், காளீஸ் இயக்கத்தில் உருவாகி நேற்று கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. இப்படத்தில் விஜய் நடித்த கதாபாத்திரத்தில் வருண் தவான் நடிக்க, கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்திருந்தார். வாமிக்கா காபி... எமி ஜாக்சன் நடித்த கதாபாத்திரத்திலும், ஜாக்கி ஷரீஃப் மகேந்திரன் நடித்த வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். தமன் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். 

ஹய்யோடா அவ பார்த்த பார்வை! ஹனிமூனில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய ரம்யா பாண்டியன்!
 

55
Baby John Collection

Baby John Collection

 தெறி படத்தை விட இரண்டு மடங்கு பட்ஜெட்டில் உருவான 'பேபி ஜான்' திரைப்படம் நேற்று வெளியான நிலையில், இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 'தெறி ' திரைப்படம்  முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் 18.1 கோடி வசூலும், உலக அளவில் 39.96 கோடி வசூலும் செய்தது. ஆனால் 'பேபி' ஜான் திரைப்படம் நேற்று ஒரே நாளில், உலக அளவில் 12.50 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாக சானிக் இணையதளம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தளபதி விஜயை முந்தமுடியாமல் பேபி ஜான் திரைப்படம் வசூலில் அடி வாங்கியுள்ளது உறுதியாகியுள்ளது.
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தளபதி விஜய்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved