MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஹய்யோடா அவ பார்த்த பார்வை! ஹனிமூனில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய ரம்யா பாண்டியன்!

ஹய்யோடா அவ பார்த்த பார்வை! ஹனிமூனில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய ரம்யா பாண்டியன்!

Ramya Pandian Christmas celebration : தாய்லாந்தில் தன் காதல் கணவருடன் ஹனிமூன் கொண்டாடி வரும் ரம்யா பாண்டியன், அங்கு கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் போட்டோஷூட்டும் நடத்தி உள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Dec 25 2024, 11:22 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Ramya Pandian Christmas Celebration

Ramya Pandian Christmas Celebration

டம்மி டப்பாசு படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். இதையடுத்து ராஜு முருகன் இயக்கிய ஜோக்கர் படம் மூலம் கவனம் ஈர்த்த இவருக்கு பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது அவரின் மொட்டை மாடி போட்டோஷூட் தான். அந்த போட்டோஷூட்டால் ஒரே நாளில் பேமஸ் ஆகிவிட்டார் ரம்யா.

28
Ramya Pandian, Lovel Dhawan

Ramya Pandian, Lovel Dhawan

ரம்யா பாண்டியனால் மொட்டைமாடி போட்டோஷூட் டிரெண்டும் ஆனது. இதையடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட அவர், அதில் தன் சமையல் திறமையை வெளிப்படுத்தி அசத்தினார். அந்நிகழ்ச்சியில் பைனல் வரை சென்றார் ரம்யா.

38
Ramya Pandian Latest Photos

Ramya Pandian Latest Photos

குக் வித் கோமாளி முடிந்த கையோடு, ரம்யா பாண்டியனுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு வந்தது. அதை ஏற்று பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். அதுமட்டுமின்றி சிம்பு தொகுத்து வழங்கிய பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக வந்த ரம்யா, டைட்டில் வெல்லும் வாய்ப்பை நூலிழையில் நழுவ விட்டார்.

48
Ramya Pandian Candid Photos

Ramya Pandian Candid Photos

பிக் பாஸுக்கு பின் சினிமாவில் ஒரு ரவுண்டு வரலாம் என எதிர்பார்த்து காத்திருந்த ரம்யா பாண்டியனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவருக்கு எதிர்பார்த்த பட வாய்ப்புகள் கிடைக்காததால், மீண்டும் கவர்ச்சி ரூட்டுக்கு திரும்பி விதவிதமாக போட்டோஷூட் நடத்தினார். அதுவும் அவருக்கு கைகொடுக்கவில்லை.

இதையும் படியுங்கள்... கணவரோடு திருசெந்தூர் போன ரம்யா பாண்டியன்.! எதிர்பாராமல் கிடைத்த பிரபலத்தின் வாழ்த்து!

58
Ramya Pandian Romantic Photo

Ramya Pandian Romantic Photo

இதையடுத்து யோகா பயிற்சியில் இறங்கிய ரம்யா, ரிஷிகேஷில் உள்ள ஆசிரமத்தில் தங்கி பயிற்சி மேற்கொண்டார். அப்போது அங்கு பயிற்சியாளராக பணியாற்றும் லோவெல் தவான் மீது காதல் ஏற்பட்டுள்ளது. சில மாதங்கள் இருவரும் ரகசியமாக காதலித்து வந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

68
Ramya Pandian Lover Lovel Dhawan

Ramya Pandian Lover Lovel Dhawan

ரிஷிகேஷில் கங்கை நதிக்கரை ஓரம் நடைபெற்ற ரம்யா பாண்டியன் - லோவெல் தவான் திருமணத்தில் உறவினர்கள் கலந்துகொண்டனர். பின்னர் சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்டமான திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

78
Ramya Pandian Husband

Ramya Pandian Husband

திருமணம் முடிந்த கையோடு, தன் காதல் கணவருடன் தாய்லாந்துக்கு ஹனிமுன் சென்ற ரம்யா பாண்டியன், அங்கு தன் கணவருடன் சேர்ந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி இருக்கிறார். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது எடுத்த புகைப்படங்களையும் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் ரம்யா.

88
Ramya Pandian Christmas Celebration Photos

Ramya Pandian Christmas Celebration Photos

அதில் இருவரும் ரொமாண்டிக் போஸ் கொடுத்துள்ளனர். நடிகை ரம்யா பாண்டியன் திருமணத்துக்கு பின் தன் கணவருடன் நடத்திய முதல் போட்டோஷூட் இதுவாகும். ரம்யா பாண்டியன் தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்த கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்த வண்ணம் உள்ளன.

இதையும் படியுங்கள்... ரம்யா பாண்டியன் வெட்டிங் ரிசப்ஷனில் ஒன்று திரண்ட பிக்பாஸ் பிரபலங்கள்! வைரல் போட்டோஸ்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
ராதாவாக மாறிய உதய சந்திரா - எப்படி, எதற்காக? யாருக்கும் தெரியாத உண்மை கதை இதோ!
Recommended image2
‘கருப்பு’க்கு முன் மே மாதத்தில் ரிலீஸ் ஆன சூர்யா படங்களும்... அதன் ரிசல்டும் ஒரு பார்வை
Recommended image3
Youth Review : முதல் படத்திலேயே சிக்சர் அடித்தாரா கென்? யூத் விமர்சனம் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved