MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சிஎஸ்கே-வை வீழ்த்திய கையோடு சூப்பர்ஸ்டார் வீட்டுக்கு விசிட் அடித்த கொல்கத்தா வீரர்கள் - வைரலாகும் போட்டோஸ்

சிஎஸ்கே-வை வீழ்த்திய கையோடு சூப்பர்ஸ்டார் வீட்டுக்கு விசிட் அடித்த கொல்கத்தா வீரர்கள் - வைரலாகும் போட்டோஸ்

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் வெற்றிபெற்ற பின்னர் கொல்கத்தா அணி வீரர்கள் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசி உள்ளனர்.

2 Min read
Author : Ganesh A
Published : May 16 2023, 08:37 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்று போட்டிகள் தற்போது இறுதிகட்டத்தை எட்டி உள்ளன. இன்னும் ஒரு வாரம் மட்டுமே லீக் போட்டிகள் எஞ்சி உள்ளன. தற்போதைய நிலவரப்படி குஜராத் டைட்டன்ஸ் அணி மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. எஞ்சியுள்ள 3 இடங்களை பிடிக்க சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, ராஜஸ்தான், பஞ்சாப், மும்பை, லக்னோ ஆகிய அணிகள் போட்டிபோட்டு வருகின்றன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

அந்த வகையில் இந்த தொடரில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த ஞாயிறன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தங்களது கடைசி லீக் போட்டியை விளையாடியது. அந்த போட்டியில் நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சிஎஸ்கே எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த சென்னை அணி முதலில் 145 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதையும் படியுங்கள்..சென்னையில் வெற்றிக் கொடியை பறக்கவிட்ட நிதிஷ் ராணா - ரிங்கு கூட்டணி; பிளே ஆஃப் வாய்ப்பு இருக்கா?

34

இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி முதல் 3 விக்கெட்டுகளை மளமளவென விட்டாலும், அடுத்து வந்த நிதிஷ் ராணா மற்றும் ரிங்கு சிங் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடி சென்னை அணியின் பவுலிங்கை துவம்சம் செய்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது. இந்தப் போட்டியில் வெற்றியடைந்த குஷியில் இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளனர்.

44

சென்னையை சேர்ந்த வருண் சக்ரவர்த்தி தற்போது கொல்கத்தா அணிக்காக விளையாடி வருகிறார். அவரும், வெங்கடேஷ் ஐயரும் ரஜினிகாந்தின் வீட்டுக்கு சென்று அவரை நேரில் சந்தித்து பேசி உள்ளனர். இருவரும் ரஜினியின் தீவிர ரசிகர்கள். அவர்கள் இருவரும் ரஜினியை சந்தித்தபோது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதன்மூலம் தனது கனவு நனவானதாக வெங்கடேஷ் ஐயர் நெகிழ்ச்சி உடன் பதிவிட்டு உள்ளார். 

இதையும் படியுங்கள்... சென்னையில் நடந்த கடைசி லீக்; தோற்றாலும் கம்பீரம் குறையாமல் ரசிகர்களை அன்பில் ஆழ்த்திய தோனி அண்ட் டீம்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ரஜினிகாந்த்
Latest Videos
Recommended Stories
Recommended image1
CM Vijay ராஜினாமா செய்த தொகுதியில் போட்டியிடும் ராகவா லாரன்ஸ்? பரபரக்கும் திருச்சி கிழக்கு! ஜூன் 11 முக்கிய அறிவுப்பு!
Recommended image2
New Tamil Movies : அடுத்த 2 மாதங்களில் ரிலீசாகும் படங்கள்! அடுத்தடுத்து வரும் மிரட்டலான அறிவிப்புகள்!
Recommended image3
Salim Kumar: மலையாள நடிகர் ச‌லீம் குமார் திடீர் மரணம்! தனுஷ், சரத்குமார் படங்களில் கலக்கியவரின் உயிரிழப்புக்கு காரணம் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved