சென்னையில் வெற்றிக் கொடியை பறக்கவிட்ட நிதிஷ் ராணா - ரிங்கு கூட்டணி; பிளே ஆஃப் வாய்ப்பு இருக்கா?

சென்னைக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

KKR beat CSK by 6 Wickets Difference in IPL 61st Match at MA Chidambaram Stadium Chennai

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான 61ஆவது போட்டி நேற்று சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடந்தது. இந்த மைதானத்தில் நடக்கும் கடைசி லீக் போட்டி என்பதால், ரசிகர்கள் அதிகளவில் கூடினர். இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

CSKஐவிட RCBக்காக முதல் வீரராக 600 ரன்கள் குவித்த ஃபாப் டூப்ளெசிஸ்!

அதன்படி டெவான் கான்வே மற்றும் ருத்துராஜ் கெய்க்வாட் இருவரும் களமிறங்கினர். ஆனால், இவர்களால் போதுமான ரன்கள் குவிக்கமுடியவில்லை.  ருத்துராஜ் 17 ரன்களிலும், ரஹானே 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கான்வே 30 ரன்களில் வெளியேறினார். ராயுடு 4 ரன்னிலும், மொயீன் அலி 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஜடேஜா 20 ரன்னில் வெளியேறினார். கடைசியாக வந்த தோனியோ 3 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதில், ப்ரீஹிட் பந்தில் கிளின் போல்டும் ஆனார்.

12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மார்க்‌ஷீட்டை வெளியிட்ட ஷஃபாலி வர்மா!

ஒரு கட்டத்தில் அதிரடியாக ஆடிய ஷிவம் துபேயும் தன் பங்கிற்கு 48 ரன்கள் சேர்த்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். இறுதியாக சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ரஹ்மானுல்லா குர்பாஸ் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜேசன் ராய் 12 ரன்களில் வெளியேறினார். அதன் பிறகு வந்த வெங்கடேஷ் ஐயர் 9 ரன்களில் வெளியேறினார்.

சேப்பாக்கத்தில் கடைசி மேட்ச்: முதல் அணியாக பிளே ஆஃப் செல்லுமா சென்னை?

இறுதியாக நிதிஷ் ராணா மற்றும் ரிங்கு சிங் இருவரும் இணைந்து பொறுமையாக ஆடி ரன்கள் சேர்த்தனர். ஒரு கட்டத்தில் இருவருமே அரைசதம் அடித்தனர். ரிங்கு சிங் 54 ரன்களில் ரன் அவுட் செய்யப்பட்டார். நிதிஷ் ராணா 57 ரன்கள் சேர்த்து கடைசி வரை களத்தில் இருந்தார். இறுதியாக கொல்கத்தா 18.3 ஓவர்களில் 147 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக கொல்கத்தா 12 புள்ளிகளுடன் 7ஆவது இடத்தில் உள்ளது. எனினும் கொல்கத்தாவிற்கு இன்னும் பிளே ஆஃப் வாய்ப்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை 15 புள்ளிகளுடன் இன்னும் 2ஆவது இடத்திலேயே நீடிக்கிறது.

பிளே ஆஃப் வாய்ப்பு பெறுமா ராஜஸ்தான்? டாப் 4 யாருக்கு?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios