சேப்பாக்கத்தில் கடைசி மேட்ச்: முதல் அணியாக பிளே ஆஃப் செல்லுமா சென்னை?
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான 61ஆவது போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான 61ஆவது போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. ஏற்கனவே 15 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில் உள்ள சிஎஸ்கே அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் 17 புள்ளிகளுடன் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி 7 தோல்வி, 5 வெற்றிகளுடன் உள்ளது. இதனால் இனி வரும் 2 போட்டிகளிலும் வெற்றி பெறுவதோடு, மற்ற அணிகளின் வெற்றி, தோல்வியை பொறுத்து கொல்கத்தாவின் பிளே ஆஃப் வாய்ப்பு அமையும்.
பிளே ஆஃப் வாய்ப்பு பெறுமா ராஜஸ்தான்? டாப் 4 யாருக்கு?
ஆக மொத்தத்தில் கொல்கத்தாவிற்கு பிளே ஆஃப் சந்தேகம் தான். ஏற்கனவே குஜராத் 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. சென்னை 15 புள்ளிகளுடன் 2ஆவது இடத்திலும் மும்பை 14 புள்ளிகளுடன் 3ஆவது இடத்திலும் லக்னோ அணி 13 புள்ளிகளுடன் 4ஆவது இடத்திலும் உள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் கடைசி போட்டி என்பதால், இந்தப் போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்போடு தான் தோனி தலைமையிலான சென்னை அணி களமிறங்கும். இதுவரையில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 27 போட்டிகளில் 18ல் சென்னை அணியும், 9ல் கொல்கத்தா அணியும் வெற்றி பெற்றுள்ளன. எனினும், இந்தப் போட்டியில் எப்படியாவது வெற்றியை தன் வசப்படுத்திக் கொள்ள கொல்கத்தா போராடும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிளே ஆஃப் வாய்ப்பு போச்சு: முதல் அணியாக வெளியேறிய டெல்லி கேபிடல்ஸ்!