பிளே ஆஃப் வாய்ப்பு பெறுமா ராஜஸ்தான்? டாப் 4 யாருக்கு?
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான 60ஆவது போட்டி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஜெய்பூர் மைதானத்தில் நடக்கிறது.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில், 8 போட்டிகளில் தோல்வி அடைந்த டெல்லி கேபிடல்ஸ் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து ஐபிஎல் தொடரிலிருந்து முதல் அணியாக வெளியேறியது. தற்போது தங்களை பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொரு அணியும் போராடி வருகின்றன. இன்று நடக்கும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடம் பிடிக்கும்.
பிளே ஆஃப் வாய்ப்பு போச்சு: முதல் அணியாக வெளியேறிய டெல்லி கேபிடல்ஸ்!
மாறாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றால் அது குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளுக்கு வாய்ப்பை ஏற்படுத்தும் விதமாக அமையும்.
பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற இரு அணிகளுமே இன்றைய போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 12 போட்டிகளில் 6ல் வெற்றி பெற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5ஆவது இடத்திலும், 11 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7ஆவது இடத்திலும் உள்ளது.
ஓபனிங் நல்லா இருந்தாலும் பினிஷிங் சரியில்லாம போச்சு: பஞ்சாப்பிடம் சரண்டரான டெல்லி!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் பக்கபலமாக இருக்கிறார். இதுவரையில் 12 போட்டிகளில் விளையாடிய அவர் 4 அரைசதம், ஒரு சதம் உள்பட 575 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளார். அதிகபட்சமாக 124 ரன்கள் எடுத்துள்ளார். இதே போன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டூப்ளெசிஸ் 11 போட்டிகளில் 6 அரைசதங்கள் உள்பட 576 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக 84 ரன்கள் எடுத்துள்ளார்.
ஹைதராபாத் பிளே ஆஃப் வாய்ப்பு எப்படி? GT, RCB, MI அணிகளை ஓட ஓட விரட்டினால் அமையுமா?
இன்று நடக்கும் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடினால், அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு கேப் பெறும் வாய்ப்பு உள்ளது. இரு அணிகளும் இதுவரையில் 29 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், 14 போட்டிகளில் ஆர்சிபி அணியும், 12 போட்டிகளில் ஆர்ஆர் அணியும் வெற்றி பெற்றுள்ளன. 3 போட்டிகளுக்கு முடிவு எட்டப்படவில்லை. இந்த சீசனில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக பெங்களூருவில் நடந்த போட்டியில் ஆர்சிபி அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
உலகக் கோப்பை ஜெயிக்க கண்டிப்பாக இந்த 2 பேருக்கு வாய்ப்பு கொடுக்கணும் – ரவி சாஸ்திரி!
ராஜஸ்தான் ராயல்ஸ் உத்தேச 11:
யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஜோ ரூட், துருவ் ஜூரெல், ஷிம்ரான் ஹெட்மையர், ரவிச்சந்திரன் அஸ்வின், டிரெண்ட் போல்ட், சந்தீப் சர்மா, கேஎம் ஆசிஃப், யுஸ்வேந்திர சஹால்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உத்தேச 11:
ஃபாப் டூப்ளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, அனுஜ் ராவத், கிளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், வணிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், ஜோஸ் ஹசல்வுட்.