MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இப்பவும் சொல்றேன் விஜய் தான் நம்பர் 1... அவர் படங்களோட வசூலை யாராலையும் அடிச்சுக்க முடியாது - தில் ராஜு

இப்பவும் சொல்றேன் விஜய் தான் நம்பர் 1... அவர் படங்களோட வசூலை யாராலையும் அடிச்சுக்க முடியாது - தில் ராஜு

நடிகர் விஜய் தான் தமிழ்நாட்டில் நம்பர் 1 ஸ்டார் என தான் சொன்னது ஏன் என்பது குறித்து வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு விளக்கம் அளித்துள்ளார். 

2 Min read
Author : Ganesh A
| Updated : Dec 29 2022, 12:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள வாரிசு திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. வம்சி இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்துள்ளார். தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு இப்படத்தின் மூலம் தமிழில் எண்ட்ரி கொடுக்க உள்ளார். 

24

வாரிசு படம் தெலுங்கிலும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளதால், அங்குள்ள ஊடகங்களில் தில் ராஜு தான் புரமோஷனுக்காக பல்வேறு பேட்டிகளை கொடுத்து வருகிறார். அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அளித்த பேட்டி ஒன்றி தமிழ்நாட்டில் விஜய் தான் நம்பர் 1 நடிகர் என கூறி இருந்தார். இதற்கு எதிர்ப்புகளும் கிளம்பி இருந்தன.

இதையும் படியுங்கள்... புரமோஷனுக்காக ரெயில் ஒட்டப்பட்ட வாரிசு படத்தின் பிரம்மாண்ட ஸ்டிக்கர்களை டார் டாராக கிழித்தெறிந்து மர்மநபர்கள்

34

அதேபோல் கடந்த வாரம் சென்னையில் நடந்த வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தில் ராஜு பேச மேடை ஏறிய போது, ரசிகர்கள் நம்பர் 1, நம்பர் 1 என கத்தி ஆரவாரம் செய்தனர். இதனால் உற்சாகம் அடைந்த அவர் ரசிகர்களுடன் சேர்ந்து நம்பர் 1 என கத்தி அவர்களை உற்சாகப்படுத்தினார். இதையடுத்து பேசும்போதுகூட விஜய் தான் சூப்பர்ஸ்டார் என பேசி இருந்தார்.

44

இந்நிலையில், தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில், தான் விஜய்யை நம்பர் 1 என சொல்வது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். திரையரங்கு மூலம் வரும் கலெக்‌ஷனை வைத்து தான் யார் நம்பர் 1 என்பது தீர்மானிக்கப்படுகிறது. அப்படி பார்த்தால் விஜய்யின் கடைசி 5, 6 படங்கள் திரையரங்கு மூலம் மட்டும் ரூ.60 கோடிக்கு மேல் ஷேர் கொடுத்துள்ளன. வேறு எந்த நடிகருக்கும் இந்த அளவு கிடைக்கவில்லை. படம் வெற்றி அடைகிறதோ, தோல்வி அடைகிறதோ அதன் வசூல் தான் முக்கியம் என தில் ராஜு விளக்கம் அளித்துள்ளார். அவரின் இந்த பேச்சு தற்போது கோலிவுட்டில் பேசு பொருளாகி உள்ளது.

இதையும் படியுங்கள்... வரிசையாக 6 பெரிய பட்ஜெட் படங்கள்... பல நூறு கோடிகளை வாரி இறைத்த லைகா - 2022 போல் 2023-லும் தட்டிதூக்குமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தளபதி விஜய்
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஷூட்டிங் ஸ்பாட்டில் நயன்தாரா கேட்கும் வசதிகள் என்னென்ன? எதற்காக இந்த பிடிவாதம்? அக்ரிமெண்ட் முதல் கேரவன் வரை... முழு விவரம்!
Recommended image2
ராஷ்மிகாவை விட விஜய் தேவரகொண்டா இத்தனை வயசு மூத்தவரா? வெளிவந்த வயது வித்தியாசம்
Recommended image3
தாய் கிழவி முதல் தடயம் வரை... பிப்ரவரி 27ல் தியேட்டர் & OTT-ல் புது ரிலீஸ் என்னென்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved