புரமோஷனுக்காக ரெயில் ஒட்டப்பட்ட வாரிசு படத்தின் பிரம்மாண்ட ஸ்டிக்கர்களை டார் டாராக கிழித்தெறிந்து மர்மநபர்கள்
சென்னையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அனந்தபுரி ரெயிலில் வாரிசு படத்தின் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு பிரம்மாண்டமாக புரமோட் செய்யப்பட்டு இருந்தது.
விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் அப்படத்திற்கான புரமோஷன் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. வாரிசு படத்தை தமிழ்நாட்டில் செவன் ஸ்கிரீன் நிறுவனம் வெளியிடுகிறது. அந்நிறுவனம் தான் தற்போது தமிழ்நாடு முழுக்க அப்படத்தின் புரமோஷன் பணிகளை தீவிரமாக செய்து வருகிறது.
இந்த புரமோஷனின் ஒரு பகுதியாக ரெயிலில் வாரிசு படத்தின் பிரம்மாண்ட ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு வந்தன. அந்த வகையில் முதலாவதாக சென்னை மெட்ரோ ரெயிலில் ஒட்டப்பட்டு அந்த ரெயில் சென்னை முழுக்க வலம் வந்து கொண்டிருக்கிறது. ரசிகர்கள் அதனை வாரிசு ரெயில் என அழைக்கும் அளவுக்கு பேமஸ் ஆனது.
இதையும் படியுங்கள்... வரிசையாக 6 பெரிய பட்ஜெட் படங்கள்... பல நூறு கோடிகளை வாரி இறைத்த லைகா - 2022 போல் 2023-லும் தட்டிதூக்குமா?
இதற்கு அடுத்தபடியாக வெளியூர் செல்லும் ரெயில்களில் வாரிசு பட ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. அந்த வகையில் கடந்த வாரம் சென்னையில் இருந்து தஞ்சாவூர் செல்லும் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் குறிப்பிட்ட சில பெட்டிகளில் மட்டும் வாரிசு படத்தின் பிரம்மாண்ட ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு இருந்தன.
இதையடுத்து நேற்று சென்னையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அனந்தபுரி ரெயிலில் வாரிசு படத்தின் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு பிரம்மாண்டமாக புரமோட் செய்யப்பட்டு இருந்தது. அந்த ஸ்டிக்கர் ஒட்டிய ஒரே நாளில் மர்மநபர்கள் அதனை டார் டாராக கிழித்துள்ளனர். கிழிந்த நிலையில் இருக்கும் அந்த போஸ்டர்களை போட்டு எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு விஜய் ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... எலிமினேட் ஆன போட்டியாளரை மீண்டும் வைல்டு கார்டு எண்ட்ரியாக களமிறக்கும் பிக்பாஸ்... டி.ஆர்.பி எகிறப்போகுது..!