அட்லீயின் முதல் வாரிசு... பிரியா அட்லீயின் வளைகாப்பு நிகழ்ச்சியில் முதல் ஆளாக ஆஜரான விஜய் - வைரலாகும் போட்டோஸ்
சென்னையில் நடைபெற்ற பிரியா அட்லீயின் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் விஜய்யின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆர்யா நடிப்பில் வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. முதல் படத்திலேயே கமர்ஷியல் ஹிட் கொடுத்த அட்லீக்கு, அடுத்ததாக கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் விஜய்யின் தெறி திரைப்படம். விஜய்யின் தீவிர ரசிகனான அட்லீ, அப்படத்தை இயக்கி இருந்தார் என்று சொல்வதைவிட விஜய்க்காக பார்த்து பார்த்து செதுக்கி இருந்தார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு ஒவ்வொரு சீனும் செம்ம மாஸாக எடுத்திருந்தார். இப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
தெறி படத்தின் பணியாற்றியபோதே அட்லீ செய்த வேலையை பார்த்து வியந்துபோன விஜய், அடுத்தடுத்து தான் நடித்த மெர்சல் மற்றும் பிகில் ஆகிய படங்களை இயக்கும் வாய்ப்பை கொடுத்தார். இந்த இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தியது. இவ்வாறு விஜய்யை வைத்து ஹாட்ரிக் ஹிட் கொடுத்த அட்லீ, தற்போது பாலிவுட் பக்கம் சென்றுவிட்டார்.
அங்கு ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படத்தை இயக்கி வருகிறார் அட்லீ. இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். அதேபோல் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வருகிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இதையும் படியுங்கள்... முதல் கார் வாங்கியதும்.. சூரரைப்போற்று டீம் உடன் ஜாலி ரைடு சென்ற சுதா கொங்கரா- அந்த காரின் விலை இத்தனை கோடியா?
இயக்குனர் அட்லீ கடந்த 2014-ம் ஆண்டு பிரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி 8 ஆண்டுகளாக குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருந்து வந்த இந்த ஜோடி, சமீபத்தில் குட் நியூஸ் சொன்னது. அதன்படி பிரியா கர்ப்பமாக இருப்பதாக கூறி, அவருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார் அட்லீ.
இந்நிலையில், பிரியா அட்லீயின் வளைகாப்பு நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் கலந்துகொண்டு அட்லீ - பிரியா இருவரையும் வாழ்த்தினார். அட்லீயின் முதல் வாரிசை வரவேற்க தளபதி 67 பட லுக்கில் வந்து கலந்துகொண்ட நடிகர் விஜய்யின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
இதையும் படியுங்கள்... லேடி சூப்பர் ஸ்டாருக்கு போட்டியா? மேட்சிங்... மேட்சிங்... உடையில் தங்க சிலை போல் நயனுடன் போஸ் கொடுத்த டிடி!