லேடி சூப்பர் ஸ்டாருக்கு போட்டியா? மேட்சிங்... மேட்சிங்... உடையில் தங்க சிலை போல் நயனுடன் போஸ் கொடுத்த டிடி!
'கனெக்ட்' படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில்... நடிகை நயன்தாராவுடன் டிடி எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது படு வைரலாகி வருகிறது.
மாயா, கேம் ஓவர், போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா இரண்டாவது முறையாக, இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'கனெக்ட்'. ரசிகர்களை சீட் நுனியில் அமரவைக்கும் வகையில், பரபரப்பான கதைக்களத்துடன்... உருவாகியுள்ள இந்த படம்... வரும் 22 ஆம் தேதி, வெளியாக உள்ளது.
பொதுவாக தான் நடிக்கும் படங்களில் புரோமோஷன் மற்றும் பட விழாக்களில் கலந்து கொள்வதை தவிர்த்து வரும், நயன்தாரா.. இந்த படத்தை தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான ரௌடி பிச்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்துள்ளதால், புரோமோஷன் பணிகளில் கலந்து கொண்டுள்ளார்.
வீடு கட்டி தருவதாக அஜித் பெயரை கூறி ரசிகரிடமே மோசடியில் ஈடுபட்ட நபர்..! பரபரப்பு புகார்..!
இந்த நிகழ்ச்சி இன்று மிகவும் பிரமாண்டமாக நடந்த நிலையில்... இந்த நிகழ்ச்சியை விஜய் டிவி தொகுப்பாளினியான டிடி தொகுத்து வழங்கியதாக கூறப்படுகிறது. மேலும் டிடி மற்றும் நயன்தாரா இருவரும் நிகழ்ச்சி முடிந்த பின்னர் எடுத்து கொண்டுள்ள புகைப்படம் படு வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தில், நயன்தாரா மற்றும் டிடி இருவரும் ஒரே நிற சேலையில் ஜொலிக்கிறார்கள். மேலும் இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலர், நயன்தாராவுக்கே டஃப் கொடுக்கும் விதத்தில் டிடி போஸ் கொடுத்துள்ளதாக கூறி வருகிறார்கள். 1 மணி நேரம் மட்டுமே ஓடும் படி எடுக்கப்பட்டுள்ள 'கனெக்ட்' படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக நடிகர் வினய் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அனுபம்கேர், சத்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.