BiggBoss Ultimate : கமல் விலகியதற்கான காரணமே வேற... பகீர் கிளப்பிய வனிதா - அப்போ கமல் சொன்னதெல்லாம் பொய்யா?
BiggBoss Ultimate : பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து நடிகர் கமல்ஹாசன் விலகியதற்கு புது காரணம் ஒன்றைக் கூறி சர்ச்சையை கிளப்பி உள்ளார் வனிதா.
உலகளவில் பிரபலமான ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் (BiggBoss) கடந்த 2017-ம் ஆண்டு தமிழில் அறிமுகமானது. விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சமில்லாத இந்நிகழ்ச்சி அந்த ஆண்டே ரசிகர்களின் பேவரைட் நிகழ்ச்சியாக மாறியது. இந்நிகழ்ச்சியின் கூடுதல் சிறப்பு என்றால் அது கமல்ஹாசன் தான். அவர் தொகுத்து வழங்கும் விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால், கடைசியாக முடிந்த 5-வது சீசன் வரை அவரே தொகுத்து வழங்கினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில், ஆரவ்வும், இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகினும், நான்காவது சீசனில் ஆரியும், ஐந்தாவது சீசனில் ராஜுவும் (Raju) டைட்டில் வின்னர்களாகினர். சமீப காலமாக ஓடிடி தளங்கள் மக்களிடையே மிகவும் பிரபலமாகி வருகின்றன. இதனால் அதில் படங்களை நேரடியாக வெளியிடுவது போன்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தியில், பிக்பாஸ் நிகழ்ச்சி பிரத்யேகமாக ஓடிடிக்கு என தயாரிக்கப்பட்டு, வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. தற்போது தமிழிலும் அதே பார்முலாவை பின்பற்றி, ஓடிடிக்கென பிரத்யேகமாக பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். பிக்பாஸ் அல்டிமேட் (BiggBoss Ultimate) என பெயரிடப்பட்டுள்ள இந்நிகழ்ச்சி 4 வாரங்களை கடந்து வெற்றிகரமாக ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை கடந்த 3 வாரங்களாக கமல் தொகுத்து வழங்கிய நிலையில், அவர் அரசியல் பணிகள் மற்றும் சினிமா ஷூட்டிங் இருப்பதால் தற்காலிகமாக இந்நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தற்போது அவருக்கு பதில் நடிகர் சிம்பு (Simbu) தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில், கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகியதற்கு புது காரணம் ஒன்றைக் கூறி சர்ச்சையை கிளப்பி உள்ளார் வனிதா. இதுகுறித்து அவர் சமீபத்திய பேட்டியில் கூறியதாவது: படப்பிடிப்பு இருக்கும் காரணத்தால் கமல் சார் வெளியேறவில்லை. விக்ரம் படத்தின் தயாரிப்பாளரே அவர் தான், எனவே அவரால் பிக்பாஸ் அல்டிமேட்டுக்கு நேரம் ஒதுக்க முடியாமல் போகக் கூடிய நெருக்கடி சுத்தமாக இல்லை. அப்படி இருக்கையில் அவர் ஏன் விலக வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ள வனிதா, நிகழ்ச்சி செல்லும் போக்கு தவறாக இருந்த காரணத்தால், அவர் வெளியேறி இருக்கலாம் எனக் கூறி உள்ளார். வனிதாவின் இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பி உள்ளது.
இதையும் படியுங்கள்... வாவ்.. செம்ம ஸ்டைலிஷா இருக்காரே! புதிய கெட்-அப்பில் அதகளப்படுத்தும் அஜித் - வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்