வாவ்.. செம்ம ஸ்டைலிஷா இருக்காரே! புதிய கெட்-அப்பில் அதகளப்படுத்தும் அஜித் - வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்
Ajith New Getup : நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக் பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. அப்போது குடும்பத்தினருடன் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் (Ajith). இவர் நடிப்பில் அண்மையில் வெளியான வலிமை (Valimai) திரைப்படம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. எச்.வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். வசூலிலும் மாஸ்காட்டி வரும் இப்படம் 5 நாட்களில் 150 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
இதனிடையே அஜித்தின் 61-வது படத்தின் பணிகளும் கடந்த சில தினங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தையும் எச்.வினோத் (H Vinoth) தான் இயக்க உள்ளார். போனி கபூர் தயாரிக்க உள்ள இப்படத்தில் நடிகர் அஜித் வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் 25 கிலோ வரை தனது உடல் எடையை குறைத்து நடிக்க உள்ளாராம்.
அஜித்தின் AK 61 படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் ஐதராபாத்தில் தொடங்க உள்ளது. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில் அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்திற்கும் இவர் தான் பின்னணி இசை அமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக் (Aadvik) பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. அப்போது குடும்பத்தினருடன் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
அந்த புகைப்படங்களில் நீளமான தாடியுடன் செம்ம ஸ்டைலிஷாக காட்சியளிக்கிறார் அஜித். மனைவி ஷாலினி (Shalini), மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் ஆகியோருடன் நடிகர் அஜித் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. அஜித்தின் இந்த கெட் அப்பை பார்த்த ரசிகர்கள் வேறலெவலில் இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... Tamil actress entering US Army :அமெரிக்க ராணுவத்தில் இணைந்த தமிழ் நடிகை! அந்த ரியல் சிங்கப்பெண் யார் தெரியுமா?