Tamil actress entering US Army :அமெரிக்க ராணுவத்தில் இணைந்த தமிழ் நடிகை! அந்த ரியல் சிங்கப்பெண் யார் தெரியுமா?
Tamil actress entering US Army : அமெரிக்க ராணுவத்தில் சேர்வது என்பது மிகவும் சவாலான ஒன்று, அதற்காக மிக கடினமான பயிற்சிகளை மேற்கொண்ட பின்னர் தான் பட்டம் பெற முடியும்.
தமிழ் திரையுலகில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ’காதம்பரி’ (Kadambari). திகில் திரைப்படமான இது சமூக கருத்தை வலியுறுத்தி உருவாகி இருந்தது. இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானர் தான் அகிலா நாராயணன்.
அமெரிக்க வாழ் தமிழ்ப் பெண்ணான இவர் கலை மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக தனது தனிப்பட்ட முயற்சியால் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகம் ஆனார். நடிப்பதோடு மட்டுமின்றி இசை மீதும் ஆர்வம் கொண்ட இவர் பிரபல பாடகியாகவும் வலம் வந்தார்.
நடிகை அகிலா நாராயணன் (Akila Narayanan), கலைத்துறையோடு தனது சாதனை பயணத்தை நிறுத்திக்கொள்ளாமல், ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் எனவும் முடிவு செய்தார். இதற்கான முயற்சிகளையும் எடுத்து வந்தார்.
அமெரிக்க ராணுவத்தில் சேர்வது மிகவும் சவாலான ஒன்று, அதற்காக மிக கடினமான பயிற்சிகளை மேற்கொண்ட பின்னர் தான் பட்டம் பெற முடியும். இருந்தாலும், தனது மகளின் விருப்பத்துக்கு அகிலாவின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்க, பல மாத பயிற்சிகளுக்கு பின் வெற்றிகரமாக பட்டம் பெற்றார்.
நடிகை அகிலா நாராயணன் (Akila Narayanan), தற்போது அமெரிக்க ராணுவத்தில் வழக்கறிஞராக இணைந்துள்ளார். இதன் மூலம் அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்த முதல் தமிழ் நடிகை என்ற பெருமையை பெற்றிருக்கிறார் அகிலா நாராயணன்.
அமெரிக்க ராணுவத்தில் உள்ள வீரர்களுக்கான சட்ட ஆலோசகராக செயலாற்ற இருக்கும் நடிகை அகிலா நாராயணன் (Akila Narayanan), தான் வாழும் நாட்டுக்கு சேவை செய்வதற்காகவே இத்துறையில் இணைந்துள்ளாராம். அவரது இந்த சேவை மனப்பான்மைக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இதையும் படியுங்கள்... sathyaraj speech : எம்.ஜி.ஆர்-க்கு பிறகு இவருதான்... நடிகர் சூர்யாவுக்கு புது பட்டம் கொடுத்த சத்யராஜ்