'வெண்ணிலா கபடிக்குழு' நடிகரின் பரிதாப நிலை! 6 மாசம் தான் உயிருடன் இருப்பாரா? கண் கலங்க வைத்த பேட்டி!
வெண்ணிலா கபடி குழு, குள்ளநரி கூட்டம் போன்ற படங்களில் நடித்த, நடிகர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவ செலவிற்கு கூட, அல்லாடும் சூழலில் இருக்கும் இவர் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து கொடுத்துள்ள பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான, 'வெண்ணிலா கபடிக்குழு', 'குள்ளநரி கூட்டம்', மற்றும் கார்த்தி நடித்த 'நான் மஹான் அல்ல' ஆகிய படங்களில் நடித்தவர் ஹரி வைரவன். இந்த மூன்று படங்களில் மட்டுமே நடித்த இவரை, பின்னர் படங்களில் பார்க்க முடியவில்லை. சமீபத்தில் இவரது மனைவி போட்ட வீடியோ ஒன்று, சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில், இவர்கள் இருவரும் சேர்ந்து, பிரபல ஊடகம் ஒன்றிக்கு கொடுத்துள்ள பேட்டி... பார்ப்பவர்கள் கண்களையே கலங்க வைத்துள்ளது.
திரைப்படங்களில் மிகவும் காமெடியாக பேசி, அன்று ரசிகர்களை சிரிக்க வைத்த வைரவன்... இன்று 4 வார்த்தைகளை சேர்ந்து பேச கூட முடியாத நிலையில் உள்ளார். இவருக்கு என்ன தான் பிரச்சனை என கேட்டபோது... இவரை பற்றி பேச துவங்கினார் மனைவி கவிதா... கடந்த 11 வருடமாக இவருக்கு சர்க்கரை வியாதி, போன்ற சில பிரச்சனைகள் உள்ளது தனக்கு தெரியும். அதை உணவிலேயே சரி செய்து கொள்ளலாம் என்று தான் நினைத்தோம். திடீர் என இவருக்கு கால்கள் வீங்க துவங்கியதும், முழு உடல் பரிசோதனை செய்தோம்... அப்போது அவரது உடலில் எந்த பிரச்னையும் இல்லை என்று தான் ரிசல்ட் வந்தது.
மேலும் செய்திகள்: 'புஷ்பா 2' படத்தில் சமந்தா வாய்ப்பை தட்டி தூக்கிய 48 வயது கவர்ச்சி புயல்! காத்திருக்கும் கவர்ச்சி விருந்து!
இதை தொடர்ந்து, மீண்டும் காலில் வீக்கம் இருந்ததால்.. மருத்துவர் ஒரு ஸ்கேன் எடுக்கும் படி கூறினார். அப்போது அந்த ஸ்கேன் எடுக்க 8000 ரூபாய் ஆகும் என கூறினார். அந்த அளவுக்கு என்னிடம் பணம் இல்லாததால் அதை என்னால் செய்ய முடியவில்லை. எனவே அரசு மருத்துவமனைக்கு சென்ற போது, அட்மிட் ஆக சொன்னார்கள். இந்த ஸ்கேன் எடுக்க 1 வாரம் ஆகும் என கூறிய நிலையில், இவர் வெண்ணிலா கபடி குழு நடிகர் என்பதால், ஒரே நிலையில் அந்த ஸ்கேன் எடுத்து... மூன்று நாள் சிகிச்சை செய்தனர். அப்போது வரை எந்த பிரச்னையும் இல்லை. நன்றாக தான் இருந்தார், இதன் பின்னர் டிஸ்சார்ஜ் ஆகி சென்றோம்.
டிஸ்சார்ஜ் ஆன பின்னர் மனஅழுத்தமாக இருப்பதாக கூறி, ஹோட்டலில் அறை எடுத்து தங்க வேண்டும் என கூறினார். தங்களுடைய மகள் அம்மாவிடம் இருந்ததால், இருவரும் அறை எடுத்து தங்கினோம். அப்போது அவரது கால்களை சமமாக நீட்டி வைக்க முடியாது. எனவே ஒரு அடி அளவுக்கு தலையணை வைத்து விட்டு தான் தூங்கினேன். அவ்வப்போது எழுந்து பார்த்தபோது, அவரது கால் கீழே கிடந்தது. தூக்கத்தில் நான் கவனிக்கவில்லை. காலை எழுந்த பின்னர் அவர் வெகு நேரம் எழுந்திரிக்காததால், எழுப்ப முயன்றேன் அப்போது எழுந்திருக்கவில்லை. ஹார்ட் பீட் மட்டும் இருப்பதை உறுதி செய்து கொண்டு, உறவினர்கள் உதவியுடன்... ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தோம். பலரும் அவர் இறந்து விட்டதாகவே நினைத்தனர். ஆனால் நான் கண் விழிப்பார் என நம்பினேன் அதன்படி, ட்ரிப்ஸ் போட்டதும் அவர் கண் விழித்தார்.
மேலும் செய்திகள்: விரைவில் அம்மா ஆகப்போகிறாரா நயன்தாரா..? விக்னேஷ் சிவன் பதிவிட்ட போட்டோவால் குழப்பத்தில் ரசிகர்கள்
12 நாட்கள் சென்று தான் அவர் கோமாவிற்கு சென்று.. பின்னர் கண் விழித்ததாக மருத்துவர்கள் கூறினார்கள். அந்த இக்கட்டான நிலையில், நடிகர் பிளாக் பாண்டி, சூரி, கார்த்தி போன்ற நடிகர்கள் தனக்கு உதவியதாகவும். குறிப்பாக கார்த்தி, அவர் டிஸ்சார்ஜ் ஆகும் வரை ஒவ்வொன்றையும் போனில் தொடர்பு கொண்டு தன்னிடம் விசாரித்து கொண்டு இருந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் தாண்டிய கணவருக்கு இரண்டு கிட்னியும் செயல் இழந்து விட்டதாகவும் எனவே 6 மாதம் தான் உயிருடன் இருப்பர் என கூட கூறினார்கள். அடுத்தது என்ன நடக்க போகிறது என்பது தெரியாது... எனவே இருக்கும் வரைக்கும் தன்னுடைய கணவருடன் சந்தோஷமாக இருக்க வேண்டும், அவரை நான் சந்தோஷமாக பார்த்து கொள்வேன். அவருக்கு எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் பாத்ரூம் அள்ளிப்போட நான் தயாராக இருக்கிறேன் அவர் எனக்கு கை கொடுத்தால் போதும் என நம்பிக்கையாக கூறி, தன்னுடைய கணவருக்கு பக்க பலமாக வாழ்ந்து வருகிறார்.
கணவருக்கு உடல்நிலை சரி இல்லாததால், தற்போது தாலி முதல்கொண்டு அனைத்து நகையையும் அடகு வைத்து விட்டேன். மெல்ல மெல்ல அவர் உடல்நலம் தேறி வந்தார். அவர் ஒரு 20 நாட்களாக வழக்கமாக எடுத்துக்கொள்ளும் மருந்து சாப்பிடாததால், மீண்டும் அவருக்கு கை... கால்... முகமெல்லாம் வீங்கி விட்டது என தெரிவித்துள்ளார். இவரை தொடர்ந்து பேசிய நடிகர் ஹரி வைரவன், கவிதா தான் தன்னுடைய வாழ்க்கை என்றும், அவர் இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை என கூறியுள்ளார். இவர்களுடைய இந்த நெகிழ வைக்கும் பேட்டி. பார்ப்பவர்கள் கண்களையே கலங்க வைத்துள்ளது.
மேலும் செய்திகள்: சூர்யா - ஜோதிகா பிஃட்னஸுக்கு காரணம் இவர் தானா? ட்ரைனருடன் ஜோடியாக கொடுத்த கூல் போஸ்..!