சூர்யா - ஜோதிகா பிஃட்னஸுக்கு காரணம் இவர் தானா? ட்ரைனருடன் ஜோடியாக கொடுத்த கூல் போஸ்..!
சூர்யா - ஜோதிகா இருவரும், தங்களுடைய பிஃட்னஸ் ட்ரைனருடன் ஜோடியாக எடுத்து கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப வித்தியாசமான கதைகளை தொடர்ந்து தேர்வு செய்து நடித்து வரும் இவர், திரைப்படத்திற்காக ரிஸ்க் எடுத்து நடிக்கவும் தயங்கியது இல்லை.
அதே போல்... இவருடைய பிஃட்டான உடல்கட்டு இவர், கிராமத்து வேடம், ரொமான்டிக் ஹீரோ, போலீஸ், போன்ற எந்த கதாபாத்திரம் ஏற்று நடித்தாலும், அதற்க்கு அப்படியே பொருந்திவிடும் இது இவரது மிகப்பெரிய ப்ளஸ் என சொல்லலாம்.
மேலும் செய்திகள்: இது தான் அஜித்தின் துணிவு படத்தின் கதை? வெளியான சீக்ரெட்.. இந்த தில்லானா உண்மை சம்பவத்தை தான் முழு படமா..!
இவருடைய மனைவி ஜோதிகாவை பார்த்தால்... யாருமே இரண்டு குழந்தைக்கு தாய் என்று சொல்ல மாட்டார்கள். குழந்தை பிறந்த பின்பு இவர் ரீ-என்ட்ரி கொடுத்த அனைத்து படங்களுமே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதால், தொடர்ந்து தரமான கதைகளை தேர்வு செய்து நடித்தும், தன்னுடைய 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் படங்களை தயாரித்தும் வருகிறார்.
திருமணத்தின் போது எப்படி இருந்தாரோ அதே போல் தான் தன்னுடைய பிட்னாசை மெயின்டெய்ன் செய்து வருகிறார். இவர்களின் இந்த சீரான பிட்னசுக்கு காரணம் இவர்கள் இருவரின் ட்ரைன் தான். இவர்கள் இருவரும் தங்களுடைய ட்ரைனருடன் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகள்: ஆச்சர்யம் ஆனால் உண்மை! உடலில் கத்தியே வைக்காமல் நடிகர் ராஜு ஸ்ரீவாஸ்தவாவுக்கு செய்யப்பட்ட உடல்கூறாய்வு! எப்படி