ஆச்சர்யம் ஆனால் உண்மை! உடலில் கத்தியே வைக்காமல் நடிகர் ராஜு ஸ்ரீவாஸ்தவாவுக்கு செய்யப்பட்ட உடல்கூறாய்வு! எப்படி
உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட மாரடைப்பால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த, பிரபல பாலிவுட் நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவா சிகிச்சை பலனின்றி உயிர் இழந்த நிலையில், இவரது உடலை நவீன முறையில் உடற்கூறாய்வு செய்துள்ள தகவல் பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
பாலிவுட் திரை உலகில் காமெடி நடிகராகவும், தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் இருந்து, லட்சக்கணக்கான ரசிகர்களை தன்னுடைய ஈடு இணை இல்லா காமெடி மூலம் சிரிக்க வைத்தவர் ராஜூ ஸ்ரீவாஸ்தவா. பிட்னஸிலும் அதிக கவனம் செலுத்தும் இவர், ஜிம்மில், உடல்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது, கடந்த ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் மயங்கி கீழே விழுந்தார். இதை அடுத்து, உடனடியாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு மருத்துவர்கள், தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
இவரது திடீர் மறைவு அவரது குடும்பத்தினரை மட்டும் இன்றி, ரசிகர்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்களை உச்சகட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் இவரது மறைவுக்கு பலர் தங்களுடைய இரங்கலை சமூக வலைதளத்தில் மூலமாகவும், நேரடியாகவும் சென்றும் அஞ்சலி செலுத்தினர். குறிப்பாக பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பல சமூக வலைதள மூலம் தங்களுடைய இரங்கலை தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்: சிறுமலை காட்டிற்குள் ஆக்ஷனில் அதிரடி காட்டிய விஜய் ஆண்டனி..! வெளியான ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்..!
பொதுவாக இறந்தவர்களின் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்ட பின்னரே அவர்களின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படுவது வழக்கம். ஆனால் இப்படி இறப்பவர்களின் உடலில் கத்தியை வைத்து வெட்டி உடற்கூறு ஆய்வு செய்து கொடுப்பதை பலர் அனுமதிப்பதில்லை. இதற்கு தீர்வு காணும் விதமாகவே தற்போது நவீன முறை உடற்கூறாய்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் உடலில் ஒரு கீறல் கூட இல்லாமல், கத்தியே வைக்காமல் உடற்கூறாய்வு... மெய்நிகர் முறையில் செய்யப்படுகிறது. இந்த முறையில் தான் தற்போது ராஜூ ஸ்ரீவாஸ்தவாவின் உடலும், மெய்நிகர் முறையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு பின்னர் அவருடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தெற்கு ஆசியாவிலேயே டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தான், இந்த மெய்நிகர் தடவியல் ஆய்வகம் முதல் முதலில் அமைக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் பிரேத பரிசோதனை செய்யும் முறை மிகவும் எளிது என்று எய்ம்ஸ் மருத்துவமனையின் தடவியல் பிரிவு தலைமை மருத்துவர் சுதீப் குப்தா கூறியுள்ளார். இந்த மெய் நிகர் முறையில், இறந்தவரின் உடல் சிடி ஸ்கேன் செய்யப்படும் என்றும், இந்த சிடி ஸ்கேன் தொழில்நுட்பம் உடலில் உள்ள அனைத்து பாகங்களையும் மருத்துவர்களுக்கு காட்டிவிடும். ஆனால் பழைய முறையில் உடலில் உள்ள அனைத்து பகுதிகளையும் மருத்துவர்களால் பார்க்க முடியாது. ஆனால் மெய்நிகர் முறையில் உள்ள நவீன தொழில்நுட்பம் மருத்துவர்களுக்கு இறந்தவரின் உடலின் உள்ள அனைத்து பாகங்களையும் காட்டும். எனவே பலமுறை பிரேத பரிசோதனை அறிக்கையை மருத்துவர்களால் படிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்: செம்ம கூல்... 'துணிவு' செகண்ட் லுக்கில் மரண மாஸாக இருக்கும் அஜித்..!
இந்த மெய்நிகர் முறை உடற்கூறாய்வு முறையை கண்டுபிடிக்க எய்ம்ஸ் மருத்துவர்கள் ஐரோப்பா, அமெரிக்கா, போன்ற பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டதாகவும் அங்கிருந்து ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் இந்த தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்த மெய்நிகர் தடவியல் ஆய்வுக்கூடத்தை அமைக்க சுமார் 10 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், நடிகர் ராஜூ ஸ்ரீவாஸ்தவா மீது செய்யப்பட்ட இந்த நவீன முறை உடற்கூறாய்வில் அவரது உடலில் ஒரே ஒரு ஊசி மட்டுமே குத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதுவும் அவர் சிகிச்சை பெற்ற போது குத்தப்பட்ட ஊசி என தெரிவித்துள்ளார்.
இந்த முறையில் உடற்கூறு ஆய்வு செய்வது மிகவும் எளிமையானது என்றும்... 24 மணி நேரமும் இதனை செய்வது சுலபம் என தெரிவித்துள்ள அவர் இந்த முடிவுகளை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். தற்போது நாட்டிலேயே முதல்முறையாக, கத்தி இன்றி... உடலில் ஒரே ஒரு கீறல் கூட இல்லாமல் ராஜூ ஸ்ரீவஸ்தவாவுக்கு உடற்கூறாய்வு செய்துள்ள தகவல் தற்போது வெளியாகி பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
மேலும் செய்திகள்: இந்தியன் 2 படத்திற்காக மிரட்டல் லுக்கிற்கு மாறிய கமல்..! படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான புகைப்படம்..!