செம்ம கூல்... 'துணிவு' செகண்ட் லுக்கில் மரண மாஸாக இருக்கும் அஜித்..!
அஜித் நடிப்பில் உருவாகி வரும் 'துணிவு' படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியான நிலையில், தற்போது இந்த படத்தில் இருந்து அஜித்தின் செகண்ட் லுக் வெளியாகியுள்ளது.
இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், அஜித் 3 ஆவது முறையாக இணைந்து நடித்து வரும், 'துணிவு' படத்தின்... பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று செம்ம மாஸாக வெளியான நிலையில், சற்று முன்னர் இரண்டாவது போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டு அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர். இந்த போஸ்டர் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகள்: இந்தியன் 2 படத்திற்காக மிரட்டல் லுக்கிற்கு மாறிய கமல்..! படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான புகைப்படம்..!
அஜித் எது செய்தாலும், அது அவரது ரசிகர்களுக்கு எப்போதுமே ஸ்பெஷல் அதிலும் அவர் நடித்த திரைப்படம் குறித்த ஏதேனும் தகவல் வெளியாகிறது என்றால், அன்றைய தினம் அவர்களுக்கு கொண்டாட்டம் தான். படத்தின் போஸ்டரை கூட, கேக் வெட்டி வரவேற்கும் ரசிகர்களும் உண்டு. எனவே தான் படம் குறித்த எவ்வித அறிவிப்பாக இருந்தாலும், அதனை யாரும் எதிர்பாராத நேரத்தில் படக்குழு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தான் நேற்றைய தினம், வெளியாவதாக கூறப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் குறித்த தகவல், உண்மையாக இருக்குமோ... அல்லது வழக்கம் போல் வதந்தியே என்கிற நினைப்பில் ரசிகர்கள் இருந்தனர். ஆனால் திடீர் என வந்த அப்டேட் அவர்களை உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
மேலும் செய்திகள்: பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இனி காவியாவாக நடிக்க போவது இவரா? பார்க்க லைட்டா சித்ரா மாதிரியே இருக்காரே!
இதை தொடர்ந்து, ரசிகர்கள் யாரும் எதிர்பாராத நேரத்தில் செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு படக்குழு இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கையில் துப்பாக்கியுடன் அஜித் ஹாய்யாக படுத்திருப்பது போல்... செம்ம மாஸாக இருந்தது. ஆனால் இரண்டாவது போஸ்டரில் அஜித்தின் முகம் மற்றும் இடம் பெற்றுள்ளது இதிலும் நோ கட்ஸ் நோ க்ளோரி என்கிற வார்த்தைகள் இடம்பெற்றுளளது. மேலும் இதுவரை வெளியான படங்களில், அஜித் சால்ட் அண்ட் பெப்பர் மற்றும் கருகரு ஹேர் ஸ்டாலில் நடித்த நிலையில், இந்த படத்தில் முழு வெள்ளை முடியுடன் நடித்து கெத்து காட்டியுள்ளார்.
மேலும் செய்திகள்: இந்தியன் 2 படத்திற்காக மிரட்டல் லுக்கிற்கு மாறிய கமல்..! படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான புகைப்படம்..!
இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு... இன்னும் சில தினங்களில் பாங்காங்கில் துவங்க உள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த மாதத்தின் இறுதியிலோ அல்லது அடுத்த மாதத்தின் முதல் வாரத்திலோ, இந்த படத்தின் அனைத்து காட்சிகளும் எடுத்து முடிக்கப்பட்டு, போஸ்ட் புரொடக்க்ஷன் பணிகள் துவங்கும் என கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு இந்த படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.