இது தான் அஜித்தின் துணிவு படத்தின் கதை? வெளியான சீக்ரெட்.. இந்த தில்லானா உண்மை சம்பவத்தை தான் முழு படமா..!
அஜித் நடித்துள்ள 'துணிவு' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில், இந்த படத்தின் கதை குறித்த சீக்ரெட் தகவல் வெளியாகி உள்ளது.
அஜித்தை பொறுத்தவரை ஒரு இயக்குனர் இயக்கத்தில், படம் நடிப்பது பிடித்து விட்டால்.. தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகளை அள்ளிக் கொடுப்பார். அந்த வகையில், 'நேர்கொண்ட பார்வை', 'வலிமை', ஆகிய இரண்டு ஹிட் படங்களை தொடர்ந்து... மூன்றாவது முறையாக இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் இணைந்து நடித்து வரும் திரைப்படம் 'துணிவு'. இந்த படத்தை மூன்றாவது முறையாக பிரபல பாலிவுட் பட தயாரிப்பாளரும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் தான் தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தின் பூஜை போடப்பட்டு, படப்பிடிப்பு துவங்கிய பின்னர் நீண்ட நாட்கள் ஆகியும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் குறித்த எந்த தகவலையும் படக்குழுவு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. ஏற்கனவே வலிமை படத்தின் அப்டேட் வெளியாக தாமதம் ஆனதால், படக்குழுவை தொடர்ந்து நச்சரித்து... செல்லும் இடமெல்லாம் வலிமை அப்டேட் கேட்டு ரசிகர்கள் அட்ராசிட்டி செய்த நிலையில், கடந்த ஒரு மாதமாக... போனி கபூரிடம் துணிவு படத்தின் அப்டேட் தகவலையும் கேட்க துவங்கினர்.
மேலும் செய்திகள்: ஆச்சர்யம் ஆனால் உண்மை! உடலில் கத்தியே வைக்காமல் நடிகர் ராஜு ஸ்ரீவாஸ்தவாவுக்கு செய்யப்பட்ட உடல்கூறாய்வு! எப்படி
ஏற்கனவே ஸ்ரீதேவியின் பிறந்த நாள் அன்று, இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டிலை போனி கபூர் வெளியிடுவார் என காத்திருந்து ரசிகர்கள் ஏமாந்தனர். இதைத்தொடர்ந்து யாரும் எதிர்பாராத விதமாக நேற்று மாலை 6 மணிக்கு அஜித் நடித்த வரும் 'துணிவு' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும், டைட்டிலையும் படக்குழு வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது.
இதை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் கதை குறித்த சீக்ரெட் தகவல் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்படும் படம் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் கதை உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது என்பது குறித்த தகவல் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகள்: செம்ம கூல்... 'துணிவு' செகண்ட் லுக்கில் மரண மாஸாக இருக்கும் அஜித்..!
அதாவது கடந்த 1985 ஆம் ஆண்டு பஞ்சாப் வங்கியில், 15 சீக்கியர்கள் போலீஸ் வேடத்தில் நுழைந்து சுமார் 4.5 பில்லியன் அமெரிக்க டாலருக்கு நிகரான பணத்தை கொள்ளையடித்து சென்றனர். அதேநேரம் அந்த வங்கியில் உள்ள ஊழியர்களுக்கோ... வாடிக்கையாளர்களுக்கோ... சிறு காயத்தை கூட அவர்கள் ஏற்படுத்தவில்லை. அனைத்தையும் அசைவுகளையும் திட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த கதையை தான், தற்போது மையமாக வைத்து தற்போது துணிவு படத்தை இயக்குனர் ஹச் வினோத் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதே போன்ற கதையை மையமாக வைத்து தான்... 'Money heist' வெப் சீரிஸ் தொடரும் எடுக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே... ஏற்கனவே 'துணிவு' திரைப்படம் Money heist வெப் சீரிஸில் காப்பி போன்று எடுக்கப்படுகிறதா? என சில தகவல்கள் உலா வந்த நிலையில்... இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. படம் வந்த பின்னரே... உண்மையான கதைக்களம் என்ன என்பது தெரியவரும்.
மேலும் செய்திகள்: இந்தியன் 2 படத்திற்காக மிரட்டல் லுக்கிற்கு மாறிய கமல்..! படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான புகைப்படம்..!