'புஷ்பா 2' படத்தில் சமந்தா வாய்ப்பை தட்டி தூக்கிய 48 வயது கவர்ச்சி புயல்! காத்திருக்கும் கவர்ச்சி விருந்து!
'புஷ்பா' படத்தில் சமந்தா ஆடிய கவர்ச்சி நடனம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற நிலையில், 'புஷ்பா 2' படத்தில் இவரது வாய்ப்பு, 48 வயது கவர்ச்சி நடிகைக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரபல தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில், கடந்தாண்டு கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளியான திரைப்படம் 'புஷ்பா'. செம்மர கடத்தல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில், ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு தன்னுடைய தோற்றத்தை மாற்றி நடித்திருந்தார் அல்லு அர்ஜுன். இவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா நடித்திருந்தார்.
இந்தப் படத்தில் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இசையில், வெளியான அனைத்து பாடல்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், சமந்தா ஆடிய ஐட்டம் பாடலுக்கு ரசிகர்கள் கட்டவுட் வைத்து கொண்டாடும் அளவுக்கு தங்களுடைய ஏகோபித்த வரவேற்பை கொடுத்தனர். குறிப்பாக 'சாமி' பாடலில், கவர்ச்சிக்கு பஞ்சம் வைக்காமல் ஆடிய நாயகி ராஷ்மிகாவின் நடனத்தை விட, ஓ சொல்றியா மாமா... பாடல் தான் பலரையும் கவர்ந்து இழுத்தது.
மேலும் செய்திகள்: சூர்யா - ஜோதிகா பிஃட்னஸுக்கு காரணம் இவர் தானா? ட்ரைனருடன் ஜோடியாக கொடுத்த கூல் போஸ்..!
அதே நேரத்தில், இந்த பாடலில் இடம்பெற்றுள்ள பாடல் வரிகள்... ஆண்களை இழிவு படுத்தும் விதத்தில் உள்ளதாக கூறி சில சர்ச்சைகள் எழுந்த நிலையில், பின்னர் அந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது.
தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் பூஜையுடன் துவங்கியது. இதில் எனவே முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள் இரண்டாம் பாகத்திலும் இணைவார்கள் என எதிர்பாக்கப்படும் நிலையில், விரைவில் படக்குழு இதுகுறித்த அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகள்: விரைவில் அம்மா ஆகப்போகிறாரா நயன்தாரா..? விக்னேஷ் சிவன் பதிவிட்ட போட்டோவால் குழப்பத்தில் ரசிகர்கள்
அதே நேரத்தில், முதல் பாகத்தில் இடம்பெற்றது போலவே இரண்டாவது பாகத்திலும், ஒரு ஐட்டம் பாடலை வைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் இதற்காக கடந்த சில மாதங்களாகவே பாலிவுட் திரை உலகை சேர்ந்த முன்னணி நடிகைகள் சிலரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. தற்போது இந்த வாய்ப்பை மலேகா அரோரா கைப்பற்றியுள்ளார். எனினும் சமந்தாவின் இடத்தை மலேகா அரோரா நிரப்புவாரா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஏற்கனவே மாலேகா அரோரா, இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'உயிரே' படத்தில் தைய தையா பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்: இது தான் அஜித்தின் துணிவு படத்தின் கதை? வெளியான சீக்ரெட்.. இந்த தில்லானா உண்மை சம்பவத்தை தான் முழு படமா..!
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் உருவாகும் 'புஷ்பா 2' இரண்டாம் பாகத்தின் படபிடிப்பு விரைவில் ஆரம்பமாகி, அடுத்த ஆண்டு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'புஷ்பா' படத்தின் முதல் பாகம் 400 கோடி வசூல் சாதனை படைத்தாலும், தொடர்ந்து கலவையான விமர்சனங்களே கிடைத்ததால், இரண்டாம் பாகத்தை கூடுதல் கவனம் செலுத்தி இயக்குனர் சுகுமார் இயக்கி வருவதாக கூறப்படுகிறது.