சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே... ஸ்லீவ் லெஸ் சுடியில் கார்ஜியஸ் போஸ் கொடுத்த வாணி போஜன் - வைரலாகும் போட்டோஸ்
லவ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் சுடிதார் அணிந்து வந்து கலந்துகொண்ட நடிகை வாணி போஜனின் கலக்கலான போட்டோஸ் இதோ.
vani bhojan
சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் வாணி போஜன். குறிப்பாக தெய்வ மகள் சீரியல் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. சீரியலில் நடித்தபோதே சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த வாணி போஜன், கடந்த 2020-ம் ஆண்டு சீரியலில் நடிப்பதை நிறுத்திவிட்டு முழுமையாக சினிமாவுக்கு நுழைந்துவிட்டார். அந்த வகையில் தமிழில் அவர் நடித்த முதல் முழு நீள திரைப்படமான ஓ மை கடவுளே மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது.
vani bhojan
ஓ மை கடவுளே திரைப்படத்தில் அவர் நடித்த மீரா கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இதனால் தொடர்ந்து வாணி போஜனுக்கு சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. சினிமா மட்டுமின்றி வெப் தொடரில் நடிக்கத் தொடங்கிய வாணி போஜன், ஜெய் உடன் டிரிபிள்ஸ், அருண் விஜய்யின் தமிழ் ராக்கர்ஸ் மற்றும் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கிய செங்களம் போன்ற வெப் தொடர்களில் நடித்திருந்தார்.
இதையும் படியுங்கள்... Maveeran Review : பேண்டஸி கதைக்கு செட் ஆனாரா சிவகார்த்திகேயன்? மாவீரன் படத்தின் முழு விமர்சனம் இதோ
vani bhojan
தற்போது நடிகை வாணி போஜன் நடிப்பில் லவ் என்கிற திரைப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக நடித்துள்ளார் வாணி போஜன். நடிகர் பரத்தின் 50-வது படம் இதுவாகும். இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. இதற்காக டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
vani bhojan
இதில் நடிகை வாணி போஜன், நடிகர் பரத், பிக்பாஸ் பிரபலம் டேனியல் உள்பட படக்குழுவினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் ஸ்லீவ் லெஸ் சுடிதார் அணிந்து வந்து கலந்துகொண்டார் நடிகை வாணி போஜன்.
vani bhojan
தக தகவென தங்கம் போல் மின்னும் கோல்டன் நிற சுடிதாரில் நடத்திய போட்டோஷூட்டை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் வாணி போஜன். இதைப்பார்த்த ரசிகர்கள், அவர் அழகு தேவை போல் உள்ளதாக வர்ணித்து வருகின்றனர். வாணி போஜனின் இந்த லேட்டஸ்ட் போட்டோஸ் இணையத்தில் படு வைரல் ஆகி வருகிறது.
இதையும் படியுங்கள்... ஸ்தம்பித்து போன ஹாலிவுட்.. 63 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் மிகப்பெரிய வேலைநிறுத்தம் - என்ன ஆச்சு?