Asianet News TamilAsianet News Tamil

Maveeran Review : பேண்டஸி கதைக்கு செட் ஆனாரா சிவகார்த்திகேயன்? மாவீரன் படத்தின் முழு விமர்சனம் இதோ

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், மிஷ்கின், யோகிபாபு நடிப்பில் வெளியாகி இருக்கும் மாவீரன் படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Sivakarthikeyan and aditi shankar starrer maaveeran full movie review
Author
First Published Jul 14, 2023, 12:28 PM IST | Last Updated Jul 14, 2023, 12:28 PM IST

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். அவர் நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் மாவீரன். மண்டேலா படத்தின் மூலம் அறிமுகமாகி இரண்டு தேசிய விருதுகளை வென்ற இயக்குனர் மடோன் அஸ்வின் தான் மாவீரன் படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக அதிதி ஷங்கரும், வில்லனாக மிஷ்கினும் நடித்துள்ளனர். மேலும் சரிதா, மோனிஷா, சுனில், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பரத் ஷங்கர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு வித்து அயன்னா ஒளிப்பதிவு செய்துள்ளார். சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண் விஸ்வா தயாரித்துள்ள இப்படம் இன்று ரிலீஸ் ஆகி உள்ளது. ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தான் இப்படத்தை தமிழகத்தில் வெளியிட்டுள்ளது. மாவீரன் படத்தின் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் படம் குறித்த தங்களது விமர்சனத்தை டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். அதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... கலக்கலான கார்ட்டூன் ஷர்ட் அணிந்தபடி மாவீரன் FDFS பார்க்க வந்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் வீடியோ

Sivakarthikeyan and aditi shankar starrer maaveeran full movie review

ஃபன் ப்ளஸ் மாஸ்

மாவீரன் சிவகார்த்திகேயனுக்கு கச்சிதமான படம். டான், டாக்டர் படங்களையெல்லாம் முறியடித்து மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் படமாக இது இருக்கும். ஃபன் பிளஸ் மாஸ் பார்முலா சூப்பராக ஒர்க் அவுட் ஆகி உள்ளது. கதை எழுதியுள்ள விதம் சூப்பர். சிவகார்த்திகேயன், யோகிபாபு, மிஷ்கின் மற்றும் விஜய் சேதுபதி தான் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் என பதிவிட்டுள்ளார்.

பாசிடிவ் நெகடிவ்

மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன், சக நடிகர்கள், எழுத்து, கதாபாத்திர தேர்வு, பின்னணி இசை, சண்டைக் காட்சிகள் ஆகியவை பாசிடிவாக உள்ளன. இரண்டாம் பாதியில் உள்ள தொய்வு தான் சற்று நெகடிவ் ஆக உள்ளது. மற்றபடி மாவீரன் சூப்பராக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாம் பாதி டல்

மாவீரன் முதல் பாதி அருமை, இரண்டாம் பாதி ஓரளவுக்கு உள்ளது. சிவகார்த்திகேயனின் நடிப்பு வேறலெவல். இரண்டாம் பாதியில் சில காட்சிகள் தொய்வை ஏற்படுத்துகின்றன. கிளைமாக்ஸ் காட்சிகள் கணிக்கும் படி உள்ளன. விஜய் சேதுபதியின் பின்னணி குரல் மற்றும் பேண்டஸில் காட்சிகள் நன்றாக ஒர்க் அவுட் ஆகி உள்ளது. மடோனிடம் இருந்து மீண்டும் ஒரு நல்ல படமாக மாவீரன் கிடைத்துள்ளது என பதிவிட்டுள்ளார்.

மாவீரன் வின்னர்

மாவீரனில் சிவகார்த்திகேயனின் நடிப்பு அருமையாக உள்ளது. கதை மற்றும் திரைக்கதையை அழகாக எழுதி அதை திரையில் கொண்டுவந்துள்ளார் மடோன். பின்னணி இசை சூப்பர். யோகிபாபுவின் காமெடி காட்சிகள் நன்கு ஒர்க் அவுட் ஆகி உள்ளது. விஜய் சேதுபதியின் குரல் வரும் காட்சிகள் அருமை. மாவீரன் வின்னர் என பதிவிட்டுள்ளார்.

மாவீரன் வென்றான்

மாவீரன் வென்றான், நிச்சயமாக இது பிளாக்பஸ்டர் ஹிட் ஆகும். சிவகார்த்திகேயன் மற்றும் மிஷ்கின் வெறித்தனமாக நடித்துள்ளனர். இது இன்னும் பிரம்மாண்டமாகும் என குறிப்பிட்டுள்ளார்.

முரட்டு கம்பேக்

மாவீரன் முடிஞ்சிருச்சு. படம் கன்பார்ம் பிளாக்பஸ்டர், சிவகார்த்திகேயனுக்கு முரட்டு கம்பேக் படம் இது. இயக்குனர் அஸ்வின் வெளுத்துவிட்டுட்டான் என பாராட்டி பதிவிட்டுள்ளார்.

விஜய் சேதுபதி வாய்ஸ் சூப்பர்

மாவீரன் முதல் பாதி சூப்பர். விஜய் சேதுபதியின் வாய்ஸ் ஓவர் அருமை. பாடல்கள் மற்றும் பின்னணி இசை நேர்த்தியாக உள்ளது. இரண்டாம் பாதி ஓரளவுக்கு உள்ளது. அதை இன்னும் நல்லா பண்ணிருக்கலாம். யோகிபாபு காமெடி சூப்பர். மொத்தத்தில் ஒரு நல்ல படமாக மாவீரன் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... சிக்கலில் பிக்பாஸ் சீசன் 7... எவ்ளோ சம்பளம் கொடுத்தாலும் வர மறுக்கும் நடிகைகள் - காரணம் என்ன?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios