ஸ்தம்பித்து போன ஹாலிவுட்.. 63 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் மிகப்பெரிய வேலைநிறுத்தம் - என்ன ஆச்சு?
கடந்த 63 வருடத்தில் ஹாலிவுட் கண்டு மிரண்டுள்ள ஒரு மாபெரும் வேலை நிறுத்தம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய மதிப்பில் சுமார் 500 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கும் பல நடிகர், நடிகைகளை கொண்ட ஒரு திரைத்துறை ஹாலிவுட் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் புகுத்தப்படும் எந்த ஒரு புதிய தொழில்நுட்பத்தையும் விரைவில் ஏற்றுக் கொண்டு அதை செயல்படுத்தும் மிகப்பெரிய திரைத்துறையாகவும் திகழ்ந்து வருகிறது ஹாலிவுட்.
ஆனால் தற்பொழுது அந்த ஹாலிவுட் உலகமே அஸ்திவாரத்தில் இருந்து ஆட்டம் கண்டுள்ளது என்றால் அது மிகையல்ல. சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் நடிகர், நடிகைகளை கொண்ட SAG AFTRA என்று அழைக்கப்படும் Screen Actors Guild American Federation of Television And Radio Artists அமைப்பு ஏற்கனவே வேலையை விட்டு வெளியேறிய எழுத்தாளர்கள் சங்கத்துடன் இணைந்து தற்பொழுது வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்துள்ளது.
கடந்த 63 வருடத்தில் ஹாலிவுட் கண்டு மிரண்டுள்ள ஒரு மாபெரும் வேலை நிறுத்தம் இது என்பது குறிப்பிடத்தக்கது. பிற திரைத்துறையில் உள்ளது போலவே ஹாலிவுட் நடிகர்களுக்கும், ஹாலிவுட் படத்தில் பணியாற்றும் பிற கலைஞர்களுக்கும் தனித்தனியே நலச்சங்கங்கள் இருக்கின்றது. இந்நிலையில் தொழில்நுட்பத்தின் ஆதிக்கத்தாலும், சம்பள குறைவு பிரச்சனையாலும் கடந்த 11 வாரங்களுக்கு முன்பு தங்களுடைய வேலையை விட்டு பல எழுத்தாளர்கள் விலகினர்.
Maaveeran Review : மாவீரனாக மாஸ் காட்டினாரா சிவகார்த்திகேயன்? விமர்சனம் இதோ
தங்களுக்கு உரிய சம்பளம் வழங்கும் வரை எந்த திரைப்படத்திலும் இணைய மாட்டோம் என்று அவர்கள் போர்க்கொடி தூக்கிய நிலையில், தற்போது சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் நபர்களைக் கொண்ட ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்டு அமைப்பும் அவர்களோடு இணைந்து போராட உள்ளது. தங்களுக்கான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை இந்த போராட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில் SAG இணைந்துள்ளதால் இதில் உள்ள முன்னணி நடிகர், நடிகைகள் உட்பட யாரும் தங்களுடைய படம் சம்பந்தமான நிகழ்வுகளில் கலந்துகொள்ளக்கூடாது. அது டப்பிங், நடனம். இசை போன்ற எந்த விதமான நிகழ்ச்சிகளாக இருந்தாலும் சரி. மேலும் புதியதாக எந்த படத்தையும் ஒப்பந்தமும் செய்து கொள்ளக்கூடாது. இதனால் ஹாலிவுட் ஒரு மிக மிகப் பெரிய சரிவை சந்தித்துள்ளது என்று தான் கூற வேண்டும்.
குறிப்பாக வரும் ஜூலை மாதம் 21ம் தேதி வெளியாக இருந்த கிறிஸ்டோபர் நோலனின் "Oppenheimer" திரைப்படமும் இந்த பிரச்சினையினால் தள்ளிப் போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
சிக்கலில் பிக்பாஸ் சீசன் 7... எவ்ளோ சம்பளம் கொடுத்தாலும் வர மறுக்கும் நடிகைகள் - காரணம் என்ன?