MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ‘தாய் தின்ற மண்ணே’ வைரமுத்துவின் பாடல் வரியில் ஒளிந்துள்ள சோழ வரலாறு பற்றி தெரியுமா? ஆயிரத்தில் ஒருவன் சீக்ரெட்

‘தாய் தின்ற மண்ணே’ வைரமுத்துவின் பாடல் வரியில் ஒளிந்துள்ள சோழ வரலாறு பற்றி தெரியுமா? ஆயிரத்தில் ஒருவன் சீக்ரெட்

செல்வராகவன் இயக்கத்தில் வெளியான கல்ட் கிளாசிக் திரைப்படமான ஆயிரத்தில் ஒருவனில், இடம்பெற்ற தாய் தின்ற மண்ணே பாடல் வரியில் ஒளிந்திருக்கும் வரலாறு பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 20 2026, 11:11 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Aayirathil Oruvan Movie Song Secret
Image Credit : youtube

Aayirathil Oruvan Movie Song Secret

ஒரு படத்தில் ஒரு ஜீனியர் வேலை செய்திருந்தால் பரவாயில்லை. படத்தில் வேலை பார்த்த எல்லாருமே ஜீனியஸா இருந்தா எப்படி இருக்கும். அதற்கு ஒரு உதாரணம் தான் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம். செல்வராகவன் இயக்கிய இந்த மாஸ்டர் பீஸ் திரைப்படம் வெளியான சமயத்தில் தோல்வியை தழுவினாலும், இன்று பலராலும் பாராட்டப்படும் ஒரு கல்ட் கிளாசிக் திரைப்படமாக அது மக்கள் மனதில் நிலைத்திருக்கிறது. அப்படத்தில் பணியாற்றிய கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா, ஜிவி பிரகாஷ், வைரமுத்து என அனைவருமே தங்களின் 200 சதவீத உழைப்பை போட்டிருகிறார்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ஆயிரத்தில் ஒருவன் பாடல் ரகசியம்
Image Credit : X

ஆயிரத்தில் ஒருவன் பாடல் ரகசியம்

ஆனால் அந்த உழைப்புக்கு ஏத்த அங்கீகாரம் கிடைக்கவில்லை. இருந்தாலும் அப்படத்தில் உள்ள விஷயங்களை ரசிகர்கள் ஒவ்வொன்றாக டீகோட் செய்து வருகின்றனர். அந்த வகையில் அப்படத்தில் இடம்பெறும் ‘தாய் தின்ற மண்ணே’ என்கிற பாடலின் வரிகளை வைரமுத்து எழுதி இருந்தார். மேலும் அப்பாடலுக்கு விஜய் யேசுதாஸ் தன்னுடைய குரலால் உயிர்கொடுத்திருந்தார். அந்த பாடலில் இடம்பெற்றிருக்கும் ஒரு வரியில் சோழ தேசத்து வரலாறே ஒளிந்திருக்கிறது. அது என்ன வரலாறு என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

35
பாடலில் ஒளிந்துள்ள வரலாறு
Image Credit : our own

பாடலில் ஒளிந்துள்ள வரலாறு

தஞ்சை பெரிய கோவில் கட்டிய ராஜ ராஜ சோழனுக்கு ஒரு மகன், ஒரு மகள் பிறந்தார்கள். அவர்கள் தான் ராஜேந்திர சோழன் மற்றும் குந்தவை. இதில் குந்தவை சாலுக்ய தேசத்தில் (ஆந்திர தேசம்) இருந்து தெலுங்கு மொழி தெரிந்த விமலாதித்யா என்பவரை கரம்பிடித்தார். அவர்கள் மூலமாக பிறந்தவர் தான் நரேந்திரன். ராஜேந்திர சோழனுக்கு மொத்தம் 4 குழந்தைகள். அதில் நான்காவது குழந்தையான, அம்மங்கா தேவியையும், குந்தவையின் மகன் நரேந்திரனும் மணமுடிக்கிறார்கள். அவர்களுக்கு பிறந்தவர் தான் முதலாம் குலோத்துங்க சோழன். இவருக்கு தந்தை வழி தெலுங்காகவும், தாய் வழி தமிழாகவும் இருந்தது.

45
ஒரே வரியில் சொன்ன வைரமுத்து
Image Credit : X

ஒரே வரியில் சொன்ன வைரமுத்து

குலோத்துங்க சோழன் காலத்தில் இருந்து தான் தெலுங்கு சோழர்கள் வந்ததாகவும், ஆட்சி புரிந்ததாகவும் பல வரலாற்று குறிப்புகளும் இருக்கிறது. அதன்படி ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் வரும் ரீமா சென் கேரக்டர், தெலுங்கு வழியில் வந்த சோழ மன்னரான, பார்த்திபனிடம் தமிழ் தெரியுமா என அவமானப்படுத்தும் விதமாக கேட்பார். அதற்கான பதிலாக என் தாய் தின்ற மண் தமிழ் தான் என்று ஒரு வரலாறையே சுருக்கமாக ஒரே வரியில், சொல்லியிருப்பார் வைரமுத்து. செல்வராகவன் கதையில் தான் ஒரு ஜீனியஸ் என்பதை நிரூபித்ததை போல், வைரமுத்து தன்னுடைய பாடல் வரிகள் மூலம் தான் ஒரு ஜீனியஸ் என்பதை நிரூபித்து இருக்கிறார்.

55
ஆயிரத்தில் ஒருவன் 2 வருமா?
Image Credit : our own

ஆயிரத்தில் ஒருவன் 2 வருமா?

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் மீது ரசிகர்கள் காட்டி வரும் அன்பினால் அதன் இரண்டாம் பாகம் உருவாகுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முன்னதாக தனுஷ் நடிப்பில் அப்படத்தை எடுக்க உள்ளதாக இயக்குநர் செல்வராகவன் அறிவித்திருந்தார். ஆனால் அது அறிவிப்போடு நின்றுபோனது. ஒருவேளை இயக்குநர் செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்தால், அது நிச்சயம் தமிழ் சினிமாவின் ஒரு பாகுபலியாக இருக்கும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. அவர் தற்போது செவன் ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்ப் பாடல்கள்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss : வைல்டு கார்டில் பிக் பாஸ் வைத்த ட்விஸ்ட்... TTF வாசன் உடன் வீட்டுக்குள் எண்ட்ரியாகும் அந்த 2 பேர் யார்?
Recommended image2
Sigma Review by Blue Sattai : சிக்மா படத்தின் மிகப்பெரிய மைனஸ் இதுதான்... விமர்சனத்தில் புட்டு புட்டு வைத்த ப்ளூ சட்டை மாறன்
Recommended image3
Siragadikka Aasai Salary : முத்து vs மீனா... அதிக சம்பளம் யாருக்கு? சிறகடிக்க ஆசை சீரியல் நட்சத்திரங்களின் சம்பள விவரம் இதோ
Related Stories
Recommended image1
வைரமுத்து சொன்ன 'நோ'.. பா. விஜய்க்கு அடித்த ஜாக்பாட்! வெற்றிக் கொடி கட்டு படத்தின் பாடல் Hit ஆன கதை!
Recommended image2
வைரமுத்து எழுத மறுத்த பாட்டு..! அறிமுக கவிஞரை வைத்து சூப்பர் ஹிட்டு கொடுத்த சேரன்..! என்ன பாடல் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved