MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • வைரமுத்து எழுத மறுத்த பாட்டு..! அறிமுக கவிஞரை வைத்து சூப்பர் ஹிட்டு கொடுத்த சேரன்..! என்ன பாடல் தெரியுமா?

வைரமுத்து எழுத மறுத்த பாட்டு..! அறிமுக கவிஞரை வைத்து சூப்பர் ஹிட்டு கொடுத்த சேரன்..! என்ன பாடல் தெரியுமா?

ஒரு பாடல் உருவாவதற்குப் பின்னால் பல சுவாரஸ்யமான மோதல்கள் ஒளிந்திருக்கும். அப்படி இயக்குநர் சேரன் - வைரமுத்து இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், ஒரு சூப்பர் ஹிட் பாடல் அறிமுக கவிஞரின் கைக்கு மாறியது. மெஹாஹிட்டான அந்த பாடலின் பின்னணி கதையை காண்போம்.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Feb 19 2026, 12:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
பாட்டுக்கு பின்னால் நடந்த யுத்தம்
Image Credit : Google

பாட்டுக்கு பின்னால் நடந்த யுத்தம்

தமிழ் சினிமாவில் மண் மணம் மாறாத கதைகளைத் திரையில் செதுக்குவதில் வல்லவர் இயக்குநர் சேரன். பாரதி கண்ணம்மா, பொற்காலம் எனத் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வந்த அவர், 2000-ஆம் ஆண்டு இயக்கியத் திரைப்படம் 'வெற்றிக் கொடிகட்டு'. வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் வெளிநாட்டு மோகத்தை மையமாகக் கொண்டு உருவான இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் இன்றும் பட்டித்தொட்டியெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், அந்தப் பாடல் உருவானதற்குப் பின்னால் ஒரு பெரிய 'யுத்தமே' நடந்திருக்கிறது என்பது பலரும் அறியாத உண்மை.

25
தேவா கொடுத்த 'தங்கிலீஷ்' பல்லவி
Image Credit : Asianet News

தேவா கொடுத்த 'தங்கிலீஷ்' பல்லவி

'தேனிசைத் தென்றல்' தேவா இசையமைத்த இப்படத்தில், ஒரு துள்ளலான பாடலுக்கு மெட்டுப் போடப்பட்டது. அப்போது தேவா தற்காலிகமாக ஒரு பல்லவியையும் எழுதினார். "கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு.. உன் கண்ணு ரெண்டும் என்ன மயக்கும் தவுசண்ட் வாட்ஸ் பவரு" இந்த வரிகள் இயக்குநர் சேரனுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. இதை அப்படியே பாடலில் பயன்படுத்தலாம் என முடிவு செய்தார்.

Related Articles

Related image1
பாலு மகேந்திரா சொன்ன அந்த ஒற்றை வார்த்தை.. நிலைதடுமாறி கண்ணீர் விட்ட இசைஞானி இளையராஜா!
Related image2
டி.ராஜேந்தர் எழுதிய பாடலை கேட்டு மெய்மறந்த கண்ணதாசன்.! கவிஞர் பாராட்டிய அந்த சூப்பர் ஹிட் பாட்டு எது தெரியுமா?
35
வைரமுத்துவின் மறுப்பும்.. சேரனின் பதிலடியும்!
Image Credit : our own

வைரமுத்துவின் மறுப்பும்.. சேரனின் பதிலடியும்!

வழக்கம் போல பாடலை முழுமையாக எழுத கவிப்பேரரசு வைரமுத்துவை அணுகினார் சேரன். ஆனால், பாடலில் 'கலரு', 'பவரு' போன்ற ஆங்கிலச் சொற்கள் வருவதைக் கண்ட வைரமுத்து, "இது தமிழ் பாட்டு, இதில் ஏன் ஆங்கிலம்? நான் வேறு தூய தமிழில் பல்லவி எழுதித் தருகிறேன்" எனக் கூறியுள்ளார். ஆனால் சேரனோ, "இல்லை சார், இந்தப் பல்லவி தான் இளைய தலைமுறைக்குச் சரியாக இருக்கும்" என ஒற்றைக்காலில் நின்றார். ஒருகட்டத்தில் விவாதம் சூடாக, சேரன் ஒரு கேள்வியைக் கேட்டதாக கூறப்படுகிறது.

"ஏற்கனவே நீங்கள் '50 கேஜி தாஜ்மஹால்' என்று ஆங்கிலம் கலந்து பாட்டு எழுதியிருக்கிறீர்கள் தானே? பிறகு இதற்கு மட்டும் ஏன் மறுக்கிறீர்கள்?" இந்தக் கேள்வி வைரமுத்துவை அதிருப்தி அடையச் செய்தது. "சரி, உங்களுக்கு அந்த வரிகளே போதும் என்றால், வேறு யாரையாவது வைத்துப் பாடலை எழுதிக்கொள்ளுங்கள்" என அவர் மறுத்துவிட்டார் என சினிமா பிரபலங்கள் தெரிவித்துள்ளனர்.

45
பா.விஜய்க்கு கிடைத்த ஜாக்பாட்!
Image Credit : Google

பா.விஜய்க்கு கிடைத்த ஜாக்பாட்!

அப்போது சினிமாவில் நுழையப் போராடிக் கொண்டிருந்த இளம் கவிஞர் பா.விஜய் வசம் இந்தப் பாடல் சென்றது. வைரமுத்து போன்ற ஒரு ஜாம்பவான் மறுத்த பாடலை, சவாலாக ஏற்று மீதமுள்ள வரிகளைத் தன் பாணியில் அட்டகாசமாக எழுதிக் கொடுத்தார் பா.விஜய்.

பாடல் விவரங்கள் ஒரு பார்வையில்

  • படம்: வெற்றிக் கொடிகட்டு
  • இசை: தேவா
  • இயக்கம்: சேரன்
  • பாடல்: கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு
  • பாடியவர்கள்: அனுராதா ஸ்ரீராம், மலேசியா வாசுதேவன்
55
இன்றும் அதிரும் 'பிளாக் மேஜிக்'
Image Credit : our own

இன்றும் அதிரும் 'பிளாக் மேஜிக்'

எந்தப் பாடல் வரிகளுக்காக விவாதம் நடந்ததோ, அதே வரிகள் தான் இன்று வரை அந்தப் பாடலின் அடையாளமாக இருக்கிறது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் முதல் திருவிழாக்கள் வரை இன்றும் 'கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு' பாடல் அதிர்கிறது. பெரிய கவிஞர்கள் மறுத்தாலும், ஒரு இயக்குநரின் தெளிவான பார்வையும், இளம் கவிஞரின் உழைப்பும் சேர்ந்தால் ஒரு 'எவர்கிரீன்' ஹிட் கொடுக்க முடியும் என்பதற்கு இந்தப் பாடலே சாட்சி!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
இசை
திரைப்பட விமர்சனம்
சினிமா காட்சியகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
விருமாண்டி யூனிவர்ஸில் சேயோன்... காந்தாரா பாணி கதையா? வியக்க வைக்கும் பின்னணி..!
Recommended image2
சிவாஜி, கமலுக்கு முன்பே நிகழ்த்தப்பட்ட சாதனை.! நடிப்பில் மாஸ் காட்டிய எம்.என்.நம்பியார்!
Recommended image3
விஜய் பட இயக்குனருடன் காதல்.. 3 ஆண்டில் விவாகரத்து.. இந்த நடிகை யார் தெரியுமா?
Related Stories
Recommended image1
பாலு மகேந்திரா சொன்ன அந்த ஒற்றை வார்த்தை.. நிலைதடுமாறி கண்ணீர் விட்ட இசைஞானி இளையராஜா!
Recommended image2
டி.ராஜேந்தர் எழுதிய பாடலை கேட்டு மெய்மறந்த கண்ணதாசன்.! கவிஞர் பாராட்டிய அந்த சூப்பர் ஹிட் பாட்டு எது தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved