நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் நல்ல படம்... அது பிளாப் ஆனதற்கு அவர்கள் தான் காரணம்- என்ன வடிவேலு இப்படி சொல்லிட்டாரு?
நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறாதது ஏன் என்பது குறித்து நகைச்சுவை நடிகர் வடிவேலு சமீபத்திய பேட்டியில் பேசி உள்ளார்.
நகைச்சுவை மன்னனாக திகழ்ந்து வருபவர் வடிவேலு. இவரது காமெடி காட்சிகளுக்காகவே ஓடிய படங்கள் ஏராளம் உள்ளன. சினிமாவில் இவர் சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்தாலும், மீம்ஸ்கள் வாயிலாக மக்களை மகிழ்வித்து வந்தார் வடிவேலு. “எனக்காடா எண்டு கார்டு போடுறீங்க.. எனக்கு எண்டே கிடையாது டா” என தலைநகரம் படத்தில் அவர் பேசும் வசனம் நிஜ வாழ்விலும் அவருக்கு கச்சிதமாக பொறுந்தும்.
சினிமாவில் அவர் நடிக்ககூடாது என ரெட் கார்டு போட்ட போதிலும், அதிலிருந்து மீண்டு வந்து தடைகளை தகர்த்து தற்போது சினிமாவில் மீண்டும் பிசியாக நடித்து வருகிறார் வடிவேலு. தற்போது இவர் நடிப்பில் மாமன்னன் மற்றும் சந்திரமுகி 2 ஆகிய திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. இதில் மாமன்னன் படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு தந்தையாக குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார் வடிவேலு. அதேபோல் சந்திரமுகி 2-வில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து நடித்து வருகிறார்.
வடிவேலு நடித்த நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் கடந்த டிசம்பர் 9-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை சுராஜ் இயக்கி இருந்தார். லைகா நிறுவனம் இப்படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்து இருந்தது. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தும் இப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதனால் வடிவேலு ரசிகர்கள் சற்று அப்செட் ஆகினர்.
இதையும் படியுங்கள்... ‘துணிவு’ படத்தின் வெளியீட்டு உரிமையை தட்டித்தூக்கிய ‘வாரிசு’ தயாரிப்பாளர் - இதென்ன புது டுவிஸ்டா இருக்கு..!
இந்நிலையில், நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறாதது ஏன் என்பதுகுறித்து சமீபத்திய பேட்டியில் பேசி உள்ளார் வடிவேலு. அதன்படி, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் தோல்விக்கு முக்கிய காரணம் அப்படத்திற்கு யூடியூப்பில் வந்த நெகடிவ் விமர்சனங்கள் தான் என்று தெரிவித்துள்ளார். திறந்த வெளி கக்கூஸ் மாதிரி யார் யாரோ யூடியூப் சேனல் ஆரம்பித்து அசிங்க அசிங்கமா பேசுவதாகவும், இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டும் எனவும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்திற்கு வேண்டுமென்றே நெகடிவ் விமர்சனங்களை பரப்பிவிட்டு தோல்வியடைய செய்துவிட்டதாக வடிவேலு சொல்லி உள்ளதற்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். படம் நல்லா இருந்தா ஏன் நெகடிவ் விமர்சனம் கொடுக்கப்போகிறார்கள் என வடிவேலுவிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... அடேங்கப்பா உலக மகா நடிகன் சித்தார்த்... விமான நிலைய அதிகாரி விளக்கத்தால் அதிர்ச்சியான ரசிகர்கள்!