‘துணிவு’ படத்தின் வெளியீட்டு உரிமையை தட்டித்தூக்கிய ‘வாரிசு’ தயாரிப்பாளர் - இதென்ன புது டுவிஸ்டா இருக்கு..!
விஜய் நடித்துள்ள வாரிசு படத்தை தயாரித்துள்ள தில் ராஜு, அஜித்தின் துணிவு படத்தின் ரிலீஸ் உரிமையை வாங்கி உள்ளது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்கி உள்ளார். போனி கபூர் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இப்படம் வருகிற ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையன்று திரைகாண உள்ளது. இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.
துணிவு படத்துக்கு போட்டியாக நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படமும் ரிலீசாக உள்ளது. இப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் ரிலீஸ் செய்ய உள்ளனர். வாரிசு படம் தெலுங்கில் வாரிசுடு என்கிற பெயரில் ரிலீசாக உள்ளது. அதேபோல் துணிவு படத்தையும் தெலுங்கில் டப் செய்து ரிலீஸ் செய்ய உள்ளனர். இப்படம் தெலுங்கில் தெகிம்பு என்கிற பெயரில் ரிலீசாக உள்ளது.
இதையும் படியுங்கள்... நீங்க என்ன இயேசு நாதரா..? 'செம்பி' பட விழாவில் சர்ச்சை... எஸ்கேப் ஆகி ஓடிய பிரபு சாலமன்!
துணிவு படத்தின் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களின் வெளியீட்டு உரிமையை ராதாகிருஷ்ணா எண்டர்டெயின்மென்ட் மற்றும் ஐவிஒய் ஆகிய நிறுவனங்கள் கைப்பற்றி உள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் என்ன டுவிஸ்ட் என்றால், தெலுங்கு மாநிலங்களில் முக்கிய பகுதியாக பார்க்கப்படும் நிசாம் மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய இரு இடங்களிலும் துணிவு படத்தை ரிலீஸ் செய்ய உள்ள தில் ராஜு தானாம்.
மேற்கண்ட இரண்டு பகுதிகளும் அவரின் கோட்டை என்று சொல்லப்படுகிறது. அந்த இரண்டு பகுதிகளில் உள்ள பெரும்பாலான தியேட்டர்கள் தில் ராஜுவின் கட்டுப்பாட்டில் தான் இயங்கி வருகின்றன. இதனால் அங்கு வாரிசு மற்றும் துணிவு படங்களின் ரிலீஸ் உரிமையை அவரே வாங்கி உள்ளார். அதேபோல் தமிழ்நாட்டிலும் துணிவு படத்தை வெளியிடும் ரெட் ஜெயண்ட் நிறுவனம், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நார்த் மற்றும் சவுத் ஆர்காடு ஆகிய பகுதிகளில் வாரிசு படத்தை ரிலீஸ் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... அடேங்கப்பா உலக மகா நடிகன் சித்தார்த்... விமான நிலைய அதிகாரி விளக்கத்தால் அதிர்ச்சியான ரசிகர்கள்!