வேலையே இல்ல.. கடும் மன உளைச்சல் வேற... அட பாவமே தனுஷூக்கே இந்த நிலைமையா..!
வேலையே இல்லாமல், தான் மன உளைச்சலில் இருந்ததாக நடிகர் தனுஷ் வாத்தி பட ஆடியோ லாஞ்சில் சொன்னதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
நடிகர் தனுஷ் நடித்துள்ள வாத்தி படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கி உள்ளார். இப்படம் மூலம் டோலிவுட்டில் ஹீரோவாக எண்ட்ரி கொடுக்க உள்ளார் தனுஷ். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை சம்யுக்தா மேனன் நடித்திருக்கிறார். இப்படம் தமிழில் வாத்தி எனவும், தெலுங்கில் சார் என்கிற பெயரிலும் ரிலீசாக உள்ளது.
வாத்தி படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து உள்ளார். ஏற்கனவே இப்படத்தில் இருந்து வெளியான வா வாத்தி மற்றும் நாடோடி மன்னன் ஆகிய பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பி வருகின்றன. இந்த நிலையில், வாத்தி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோலாகலமாக நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட நடிகர் தனுஷ், வேலையே இல்லாமல் தான் மன உளைச்சலில் இருந்ததாக அவர் சொன்னதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர் பேசியதாவது : “வாத்தி படத்தின் கதை 90ஸில் நடப்பதுபோன்றது. இந்த படத்துல நடிச்சப்போ தான் டீச்சர் வேலை எவ்ளோ கஷ்டமானதுனு புரிஞ்சுகிட்டேன். நம் தலையெழுத்தை மாற்றுபவர்கள் தான் வாத்தியார்கள்.
இதையும் படியுங்கள்... இளையராஜா இசையில் முதன்முறையாக பாடிய தனுஷ்... வெளியானது விடுதலை பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்
கொரோனா லாக்டவுன் சமயத்தில் தான் இயக்குனர் வெங்கி இந்தக் கதையை என்னிடம் சொன்னார். நான் வேலையில்லாமல் மன உளைச்சலில் இருந்த நேரம் அது. வெங்கி சொல்ற கதைக்கு நோ சொல்லிவிடலாம் என்கிற மனநிலையில் தான் கதையை கேட்டேன். ஆனால் கேட்டவுடன் கதை ரொம்ப பிடிச்சிருச்சு. வேற எதுவும் சொல்லாமல், எப்போ டேட்ஸ் வேணும்னு தான் அவரிடம் கேட்டேன். உங்களுக்கு இப்படம் நிச்சயம் பிடிக்கும்னு நம்புறேன்” என கூறினார்.
தனுஷின் இந்த பேச்சை கேட்டு பலரும் ஷாக் ஆகிப்போயினர். தனுஷுக்கே இப்படி ஒரு நிலைமையா என கமெண்ட் செய்து வருகின்றனர். வாத்தி திரைப்படம் வருகிற பிப்ரவரி 17-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... 3வது முறையாக கிராமி விருதை தட்டித்தூக்கிய இந்திய இசையமைப்பாளர்... யார் இந்த ரிக்கி கேஜ்?