MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ பக்கம் செல்ல தயக்கம் காட்டுகிறாரா சூர்யா..! திடீரென பிளானை மாற்றியதன் பின்னணி என்ன?

வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ பக்கம் செல்ல தயக்கம் காட்டுகிறாரா சூர்யா..! திடீரென பிளானை மாற்றியதன் பின்னணி என்ன?

சிறுத்தை சிவா இயக்கும் படத்தின் ஷூட்டிங் முடிந்ததும் வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் தான் சூர்யா நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த பிளானை திடீரென மாற்றி உள்ளாராம் சூர்யா.

1 Min read
Author : Ganesh A
Published : Jan 05 2023, 09:50 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். 3டி தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் முடியும் முன்பே, சமீபத்தில் இதன் இந்தி உரிமை ரூ.100 கோடிக்கு விற்பனை ஆனதாக தகவல் வெளியானது.

24

இதையடுத்து வெற்றிமாறனின் வாடிவாசல், சுதா கொங்கரா படம், ஜெய் பீம் இயக்குனருடன் ஒரு படம் என அடுத்தடுத்து கைவசம் படங்களை வைத்துள்ளார் சூர்யா. சிறுத்தை சிவா இயக்கும் படத்தின் ஷூட்டிங் முடிந்ததும் வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் தான் சூர்யா நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த பிளானை திடீரென மாற்றி உள்ளாராம் சூர்யா.

இதையும் படியுங்கள்... துணிவு டிரைலர் சாதனையை 4 மணிநேரத்தில் அடிச்சு துவம்சம் செய்த வாரிசு டிரைலர்

34

சிவா படம் முடிந்ததும், சுதா கொங்கரா இயக்கும் படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம் சூர்யா. இப்படத்தின் ஷூட்டிங் வருகிற ஜூன் மாதம் தொடங்கி இந்த ஆண்டு இறுதியில் முடிவடையும் என கூறப்படுகிறது. இதன்மூலம் இந்த வருடமும் வாடிவாசல் படம் தொடங்கப்பட வாய்ப்பில்லை என்பதுபோல தெரிகிறது. 

44

வெற்றிமாறன் தான் இந்த தாமதத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் அவர் இயக்கத்தில் தற்போது விடுதலை படம் தயாராகி உள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தான் நிறைவடைந்தது. தற்போது இதன் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் செம்ம பிசியாக உள்ளாராம் வெற்றிமாறன். அது முடிந்த பின்னர் தான் வாடிவாசல் படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளை அவர் தொடங்க உள்ளாராம். இதனால் தான் தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை சுதா கொங்கராவுக்கு கொடுத்துவிட்டாராம் சூர்யா.

இதையும் படியுங்கள்... கடைசி நேரத்தில் மாற்றப்பட்ட வாரிசு ரிலீஸ் தேதி! துணிவு படத்தின் வசூலுக்கு வேட்டு வைக்க விஜய் போட்ட பலே திட்டம்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிறுத்தை சிவா
சூர்யா
வெற்றிமாறன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஹரிஷ் கல்யாண் வீட்டிற்கு வந்த குட்டி மகாலட்சுமி! பெண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் நெகிழ்ந்து போன நடிகர்!
Recommended image2
தனுஷ் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! 'கர' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு – கோடை விடுமுறையில் அதிரடி வேட்டை
Recommended image3
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ரகசியம்: சூர்யா கையில் இருக்கும் குழந்தைக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம்? பர்ஸ்ட் லுக் தரும் ஷாக்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved