கடைசி நேரத்தில் மாற்றப்பட்ட வாரிசு ரிலீஸ் தேதி! துணிவு படத்தின் வசூலுக்கு வேட்டு வைக்க விஜய் போட்ட பலே திட்டம்
விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் ரிலீஸ் தேதியும், அஜித் நடித்துள்ள துணிவு படத்தின் ரிலீஸ் தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என கடந்தாண்டு ஜூன் மாதமே அறிவிப்பு வெளியாகிவிட்டது. ஆனால் அந்த சமயத்தில் அஜித்தின் துணிவு படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டனர். பின்னர் படத்தின் பணிகள் தாமதம் ஆனதால் டிசம்பர் ரிலீசுக்கு பிளான் போட்டனர். அதுவும் செட் ஆகாததால் இறுதியாக பொங்கலுக்கு களமிறங்க உள்ளதாக அறிவித்தனர். இதற்கான அறிவிப்பு தீபாவளியை ஒட்டி ரிலீஸ் ஆனது.
பொங்கல் ரிலீஸ் என திட்டமிட்ட இந்த இரண்டு படக்குழுவும், எந்த தேதியில் ரிலீஸ் செய்வதில் குழம்பிப்போய் இருந்தது. கடந்த மாதம் வெளிநாடுகளில் வாரிசு படத்தின் முன்பதிவு தொடங்கப்பட்ட போது ஜனவரி 12-ம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என வெளிநாட்டு விநியோகஸ்தர்கள் அறிவித்திருந்தனர். மறுபக்கம் துணிவு படத்தை ஜனவரி 11-ந் தேதி வெளியிடப்போவதாக கூறி இருந்தனர்.
வெளிநாட்டு விநியோகஸ்தர்களிடம் சொன்ன ரிலீஸ் தேதி தான் இறுதியாக இருக்கும் என ரசிகர்கள் கருதி வந்த போதும், இரண்டு படங்களின் டிரைலர்கள் வெளிவந்தபோது கூட அதில் ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் இருந்து வந்தனர். அதுதான் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. நேற்று வாரிசு பட டிரைலரில் ரிலீஸ் தேதி இடம்பெற்றிருக்கும் என காத்திருந்த துணிவு படக்குழுவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இதையும் படியுங்கள்... வாரிசு டிரைலர் பார்த்து அப்செட் ஆன விஜய் ரசிகர்கள்... ஏன் தெரியுமா?
இதனால் வேறு வழியின்றி வாரிசு டிரைலர் ரிலீஸ் ஆன சில மணிநேரங்களில், துணிவு படத்தை ஜனவரி 11-ந் தேதி திரைக்கு கொண்டு வர உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் போனி கபூர். அஜித் - விஜய் படங்களுக்கு எப்போதுமே முதல் நாள் வசூல் என்பது முக்கியமானது. இதனைக் கருத்தில் கொண்டு, கடைசி நேரத்தில் அதிரடி முடிவெடுத்த விஜய், வாரிசு படத்தையும் ஜனவரி 11-ந் தேதியே வெளியிடுமாறு சொல்லிவிட்டாராம்.
இதையடுத்து தான் நேற்று நள்ளிரவு அவசர அவசரமாக வாரிசு படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. வாரிசு படத்தின் ரிலீஸ் தேதி கடைசி நேரத்தில் மாற்றப்பட்டது வெளிநாட்டு விநியோகஸ்தர்களுக்கு சற்று அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஏனெனில் அவர்கள் பிரீமியர் ஷோ 12-ந் தேதி போடுவதாக அறிவித்து முன்பதிவும் முடிந்துவிட்ட நிலையில், தற்போது ஒரு நாளைக்கு முன்னதாகவே படம் ரிலீஸ் ஆவதால் அவர்கள் சற்று ஏமாற்றம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படியுங்கள்... LCU-வில் இணைகிறாரா பொன்னியின் செல்வன்?... லோகேஷ் கனகராஜ் சொன்ன கதையை கேட்டு மெர்சலான ஜெயம் ரவி