துணிவு டிரைலர் சாதனையை 4 மணிநேரத்தில் அடிச்சு துவம்சம் செய்த வாரிசு டிரைலர்
வாரிசு படத்தின் டிரைலர் விமர்சனங்களை சந்தித்தாலும், அது யூடியூப்பில் அடுக்கடுக்கான சாதனைகளை படைத்து வருகிறது அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
விஜய் - அஜித் படங்கள் 9 ஆண்டுகளுக்கு பின் ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ளதால், கோலிவுட்டே பரபரப்பாக இயங்கி வருகிறது. இரு படங்களும் வருகிற ஜனவரி 11-ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளன. ரிலீசுக்கு இன்னும் 6 நாட்களே உள்ளதால் வெளியீட்டு வேலைகளும் ஒருபுறம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் சில தினங்களில் இந்த இரு படங்களுக்கான முன்பதிவும் தொடங்கப்பட உள்ளது.
துணிவு படத்தின் டிரைலர் கடந்த வாரமே வெளியிடப்பட்டது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த டிரைலர் ரிலீஸ் ஆனாலும் இது பீஸ்ட் படத்தில் அஜித் நடித்துள்ளது போல் இருப்பதாக ட்ரோல் செய்யப்பட்டது. மறுபுறம் விஜய்யின் வாரிசு பட டிரைலருக்கும் இதே நிலைமை தான். பார்ப்பதற்கு மெகா சீரியல் டிரைலர் போல இருப்பதாக நெட்டிசன்கள் மீம் போட்டு கலாய்த்து வருகின்றனர்
இதையும் படியுங்கள்... கடைசி நேரத்தில் மாற்றப்பட்ட வாரிசு ரிலீஸ் தேதி! துணிவு படத்தின் வசூலுக்கு வேட்டு வைக்க விஜய் போட்ட பலே திட்டம்
விமர்சனங்கள் இருந்தாலும், வாரிசு படத்தின் டிரைலர் யூடியூப்பில் அடுக்கடுக்கான சாதனைகளை படைத்து வருகிறது. துணிவு படத்தின் டிரைலர் ரிலீசாகி 5 நாட்கள் ஆகியும் தற்போது வரை 1.4 மில்லியன் லைக்குகளை பெற்றுள்ளது. ஆனால் நேற்று ரிலீசான வாரிசு படத்தின் டிரைலர் இந்த சாதனையை 4 ம்ணிநேரத்தில் முறியடித்துவிட்டது. 4 மணிநேரத்தில் 1.4 மில்லியனுக்கு மேல் லைக்குகளை பெற்றுவிட்டது.
வாரிசு படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகி 16 மணிநேரம் ஆகும் நிலையில், தற்போது வரை 20 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. இதைப்பார்க்கும் போது இன்னும் சில மணிநேரங்களில் துணிவு படத்தின் சாதனையை முறியடித்துவிடும் போல தெரிகிறது. துணிவு படத்தின் டிரைலர் வெளியான 24 மணிநேரத்தில் 25 மில்லியன் பார்வைகளை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... வாரிசு டிரைலர் பார்த்து அப்செட் ஆன விஜய் ரசிகர்கள்... ஏன் தெரியுமா?