- Home
- Cinema
- Maamannan movie : உதயநிதியை ‘மாமன்னன்’ ஆக்கிய மாரி செல்வராஜ்.... நட்சத்திர பட்டாளத்துடன் வெளிவந்த பர்ஸ்ட் லுக்
Maamannan movie : உதயநிதியை ‘மாமன்னன்’ ஆக்கிய மாரி செல்வராஜ்.... நட்சத்திர பட்டாளத்துடன் வெளிவந்த பர்ஸ்ட் லுக்
அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வந்தாலும், படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார் உதயநிதி. தற்போது இவர் கைவசம் கண்ணை நம்பாதே, நெஞ்சுக்கு நீதி, ஏஞ்சல் போன்ற படங்கள் உள்ளன.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனாக உதயநிதி, கடந்த 2008-ம் ஆண்டு தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக அறிமுகமானார். குறுகிய காலத்தில் விஜய், சூர்யா, கமல் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்ததன் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராக வலம் வந்த இவர், கடந்த 2012-ம் ஆண்டு ராஜேஷ் இயக்கத்தில் வெளியான ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியடைந்தது. இதையடுத்து இது கதிர்வேலன் காதல், நண்பேண்டா, கெத்து, மனிதன், நிமிர், சைக்கோ என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து அசத்தினார். இதையடுத்து கடந்த ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டசபை தேர்தலில், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ ஆனார்.
அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வந்தாலும், படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார் உதயநிதி. தற்போது இவர் கைவசம் கண்ணை நம்பாதே, நெஞ்சுக்கு நீதி, ஏஞ்சல் போன்ற படங்கள் உள்ளன. இந்த படங்கள் அனைத்தும் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில், உதயநிதி நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மாமன்னன் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்குகிறார். இவர் ஏற்கனவே பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்களை இயக்கி உள்ளார். இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார். மேலும் நகைச்சுவை நடிகர் வடிவேலு காமெடியனாகவும், மலையாள நடிகர் பகத் பாசில் வில்லனாகவும் நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.
பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய உள்ள இப்படத்திற்கு செல்வா ஆர்.கே படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
இதையும் படியுங்கள்.... Legend movie First Look : ஆக்ஷன் ஹீரோவாக மாஸ் காட்டும் அண்ணாச்சி... வைரலாகும் லெஜண்ட் படத்தின் பர்ஸ்ட் லுக்