Legend movie First Look : லெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில், தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
பிரபலமாக மக்களால் பார்க்கப்படும் அனைவருமே வெள்ளித்திரையில் தோன்றும் வாய்ப்பு கிடைத்தால் அதனை பயன்படுத்தி கொள்கிறார்கள். அந்த வகையில், விளம்பர படங்கள் மூலம் தோன்றி அசத்தி வந்த, சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி வெள்ளித்திரையில் கால் பதித்துவிட்டார்.
ஆரம்பகால விளம்பரங்களில் இவர் தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகைகளான ஹன்சிகா, தமன்னா ஆகியோருடன் தோன்றியது பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகி ட்ரோல் செய்யப்பட்டாலும், அதனை சற்றும் கண்டு கொள்ளாமல்... தொடர்ந்து அடுத்தடுத்த விளம்பரங்களில் நடித்து மக்கள் மனதில் நிலைத்து விட்டார்.

உல்லாசம், விசில் போன்ற படங்களை இயக்கிய இரட்டை இயக்குனர்களான ஜே.டி - ஜெர்ரி இப்படத்தை இயக்குகின்றனர். மேலும் தனது முதல் படம் தரமாக இருக்கவேண்டும் என்பதற்காக தொழில்நுட்ப கலைஞர்கள் முதல் நடிகர், நடிகைகள் வரை பிரபலமானவர்களை களமிறக்கினார் சரவணன்.
இப்படத்தில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்துலா நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் பாடல் வரிகளை வைரமுத்து எழுதுகிறார். இதுதவிர இப்படத்தில் லெஜண்ட் சரவணனுடன் இணைந்து யோகிபாபு, விவேக், பெசண்ட் ரவி, ரோபோ சங்கர், பிரபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில், தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு ‘லெஜண்ட் என பெயரிடப்பட்டு உள்ளது. மேலும் அவர் ஆக்ஷன் ஹீரோ போல் போஸ் கொடுத்தபடி இருக்கும் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... அஜித்தை கண்டுகொள்ளாத ஷங்கர்.. இருவருக்கும் அப்படி என்னதான் பிரச்சனை?- பிரபல நடிகர் வெளியிட்ட ஷாக்கிங் சீக்ரெட்

