திடீரென தூக்கப்பட்ட உதயநிதி பெயர்... ரெட் ஜெயண்ட்டில் நிகழ்ந்த அதிரடி மாற்றம் - காரணம் என்ன?
உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், தான் இனி சினிமாவில் நடிக்கப்போவதில்லை என்றும், மாமன்னன் தான் தனது கடைசி படம் எனவும் அறிவித்தார்.
மு.க.ஸ்டாலினின் மகனான உதயநிதி கடந்த 2008-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான குருவி திரைப்படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். அப்படத்தை அவரின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தான் தயாரித்து இருந்தது. இதையடுத்து சூர்யாவின் ஆதவன், கமலின் மன்மதன் அம்பு என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்த இவர், ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமானார்.
இதையடுத்து தான் நடிக்கும் படங்களை மட்டும் தயாரித்து வந்த உதயநிதி, தற்போது அரசியலில் இறங்கிவிட்டதால் சினிமாவுக்கும் முழுக்கு போட்டுள்ளார். சமீபத்தில் அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின், இனி சினிமாவில் நடிக்கப்போவதில்லை என்றும், மாமன்னன் தான் தனது கடைசி படம் எனவும் அறிவித்தார்.
இதையும் படியுங்கள்... உதயநிதி தொட்டதெல்லாம் ஹிட்! 2022ல் ரெட்ஜெயண்ட் வெளியிட்டு ரூ.100 கோடிக்கு மேல் வசூலை அள்ளிய படங்கள் ஒரு பார்வை
இருப்பினும் தனது ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் மூலம் தொடர்ந்து படங்களை தயாரிக்கவும், விநியோகம் செய்வேன் என்றும் அவர் கூறி இருந்தார். இந்நிலையில், தற்போது அந்த ரெட் ஜெயண்ட்டிலும் அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது. இதுவரை ரெட் ஜெயண்ட்டின் லோகோ திரையிடப்படும்போது உதயநிதி ஸ்டாலின் வழங்கும் என குறிப்பிடப்பட்டு இருக்கும்.
ஆனால் தற்போது, அதிலிருந்து உதயநிதியின் பெயரை தூக்கிவிட்டு ரெட் ஜெயண்ட் மூவீஸ் வழங்கும் என்று குறிப்பிடுமாறு உத்தரவிட்டுள்ளனர். இதன்மூலம் இனி ரெட் ஜெயண்ட் வெளியிட உள்ள செம்பி, துணிவு, வாரிசு (4 ஏரியா), விடுதலை, பொன்னியின் செல்வன் 2 போன்ற படங்களில் ரெட் ஜெயண்ட் மூவீஸ் வழங்கும் என்பது தான் லோகோவில் இடம்பெற்று இருக்கும் என தெரியவந்துள்ளது. உதயநிதி அமைச்சர் ஆகிவிட்டதால் அவரது பெயர் அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... பிக்பாஸ் நிகழ்ச்சியின் முக்கிய விதியை மீறிய ஜனனி... வெளியேற்றப்படுகிறாரா? - வெளியான ஷாக்கிங் புரோமோ