பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்தை தட்டிதூக்கிய ரெட் ஜெயண்ட்... காத்துவாக்குல ரிலீஸ் தேதியை கசியவிட்ட உதயநிதி
மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்திற்கு கிடைத்துள்ள பிரம்மாண்ட வரவேற்பால் அதன் 2-ம் பாகம் மீதான எதிர்பார்ப்பும் பல மடங்கு உயர்ந்துள்ளது.
தமிழ் சினிமாவின் கனவு திரைப்படமாக இருந்து வந்தது பொன்னியின் செல்வன். எம்.ஜி.ஆர்., கமல்ஹாசன் என பல்வேறு ஜாம்பவான்கள் எடுக்க ஆசைப்பட்ட இந்த படம், தற்போது தான் ஒருவழியாக திரைவடிவம் கண்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் மணிரத்னம். அவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே எடுக்க முயன்று இப்படத்தை கைவிட்டாலும், தனது விடாமுயற்சியால் தற்போது வெற்றிகண்டுள்ளார்.
பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். லைகா நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ந் தேதி உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட்டது. இதில் கார்த்தி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், விக்ரம் பிரபு, பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.
கல்கி எழுதிய நாவலுக்கு எந்த அளவுக்கு வரவேற்பு கிடைத்ததோ அதைவிட டபுள் மடங்கு வரவேற்பு பொன்னியின் செல்வன் படத்துக்கு கிடைத்திருந்தது. ரிலீசாகி 25 நாட்களைக் கடந்து வெற்றிநடைபோட்டு வரும் பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகளவில் ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
இதையும் படியுங்கள்... யாராவது தன்னை பற்றியே அசிங்கமா பேச சொல்லுவாங்களா? சதீஷின் விளக்கத்தை பார்த்து கடுப்பான தர்ஷா குப்தா!
முதல் பாகத்திற்கு கிடைத்துள்ள பிரம்மாண்ட வரவேற்பால் பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் மீதான எதிர்பார்ப்பும் பல மடங்கு உயர்ந்துள்ளது. அப்படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே முடிக்கப்பட்டு தற்போது பின்னணி பணிகள் படு வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்தின் ரிலீஸ் தேதியை நடிகரும், தயாரிப்பாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் சமீபத்திய பேட்டியில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதன்படி வருகிற 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ந் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக கூறினார். அதுமட்டுமின்றி இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் தான் வெளியிட உள்ளது என்பதையும் அவர் உறுதிபடுத்தி உள்ளார்.
தமிழ் சினிமாவில் ரிலீசாகும் பெரிய படங்களின் வெளியீட்டு உரிமையை தொடர்ந்து கைப்பற்றி வந்த ரெட் ஜெயண்டால் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் ரிலீஸ் உரிமையை மட்டும் கைப்பற்ற முடியவில்லை. இருப்பினும் பின்னணில் இருந்து இப்படத்தை ரிலீஸ் செய்து கொடுத்தது அந்நிறுவனம். முதல் பாகம் மிஸ் ஆனாலும், இரண்டாம் பாகத்தை நழுவவிட விரும்பாத அந்நிறுவனம் தற்போதே அதன் உரிமையை கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... சன்னி லியோன் - தர்ஷா குப்தா ஆடை விஷயத்தில் வாயை விட்டு சிக்கிய சதீஷ்..! அடித்து பிடித்து கொடுத்த விளக்கம்..!