சன்னி லியோன் - தர்ஷா குப்தா ஆடை விஷயத்தில் வாயை விட்டு சிக்கிய சதீஷ்..! அடித்து பிடித்து கொடுத்த விளக்கம்..!
'ஓ மை கோஸ்ட்' ஆடியோ லான்ச் விழாவில் நடிகை சன்னி லியோன் மற்றும் தர்ஷா குப்தா ஆடையை ஒப்பிட்டு பேசி சர்ச்சையில் சிக்கிய காமெடி நடிகர் சதீஷ் அப்படி பேசுவதற்கு என்ன காரணம்? என்று தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் கொடுத்துள்ளார்.
ஆபாச திரைப்படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமான சன்னி லியோன், தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் கலந்து கட்டி நடித்து வருகிறார். இவருக்கு இந்தியா முழுவதும், இருக்கும் ரசிகர்களே.. சன்னி லியோனுக்கு பல மொழி படங்களின் வாய்ப்பையும் பெற்றுத் தந்துள்ளது.
சன்னி லியோன் தமிழில் சில படங்களில், கவர்ச்சி டான்ஸ் ஆடியுள்ள நிலையில், முதல் முறையாக 'ஓ மை கோஸ்ட்' என்கிற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஹாரர் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில், இவருடன் குக் கோமாளி புகழ் தர்ஷா குப்தா, பிரபல நகைச்சுவை நடிகர் சதீஷ், பிக் பாஸ் ஜி.பி.முத்து போன்ற பல நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் இசையில் இசை வெளியீட்டு விழா, கடந்த வாரம் நடந்த போது சன்னி லியோன் யாரும் எதிர்பாராத விதமாகபச்சை நிற பட்டுப்புடவையில் அழகு தேவதை போல் வந்திருந்தார். நடிகை தர்ஷா குப்தா கவர்ச்சிக்கு குறைவில்லாத உடையில் இசை வெளியீட்டு விழா மேடையை அலங்கரித்தார்.
இந்நிலையில் நடிகர் சதீஷ் மேடைக்கு வந்து பேசும்போது, பாம்பேவில் இருந்து வந்திருக்கும் சன்னி லியோன் பட்டு புடவை கட்டி வந்திருக்காங்க.. ஆனால் கோயம்புத்தூரில் இருந்து வந்த பொண்ணு எப்படி வந்திருக்காங்க பாருங்கள்? என இருவருடைய ஆடையும் ஒப்பிட்டு பேசிய விஷயம் பல்வேறு சர்ச்சையை கிளப்பியது.
ஐஸ்வர்யா படம் மிஸ் ஆனாலும்... லைகா புரோடுக்ஷன்ஸ் அடுத்த படத்தில் பட்டத்து அரசனாக மாறிய அதர்வா!
நடிகர் சதீஷின் பேச்சுக்கு எதிராக நடிகை சின்மயி, இயக்குனர் நவீன், போன்ற பலர் பெண்கள் என்ன ஆடை அணிய வேண்டும் என்பது அவர்களுடைய விருப்பம் என்றும் அதனை நீங்கள் கூறாதீர்கள் என பல்வேறு கருத்துக்களை கூறி வந்த நிலையில், அடித்துப் பிடித்துக் கொண்டு தற்போது நடிகர் சதீஷ் இதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.
இது குறித்து பேசியுள்ள சதீஷ், நடிகை தர்ஷா குப்தா தன்னுடைய தோழி, அவர் என்னிடம் பேசும்போது சன்னி லியோன் கவர்ச்சி உடையில் வருவார் என எண்ணி, நான் கவர்ச்சி உடையில் வந்தேன். ஆனால் அவர் பட்டுப்புடவை அணிந்து வந்ததால் அப்செட் ஆகி விட்டேன் என வருத்தத்துடன் கூறியதாகவும், பின்னர் இதனை அவர் மேடையில் தன்னை கூற சொன்னதாகவும் இதன் காரணமாகவே நான் ஆடை குறித்து மேடையில் பேசினேன் தவிர, வேறு எந்த உள்நோக்கமும் இல்லை.
பெண்கள் ஆடை அணிவது அவர்களுடைய சுதந்திரம் என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன் என சதீஷ் கூறியுள்ளார். மேலும் நான் பேசிய இந்த விஷயம் மிகப்பெரிய அளவில் பேசப்படுகிறது. ஆனால் நான் பல நல்ல விஷயங்களையும் மேடையில் பேசுகிறேன் அதுவும் பேசப்பட வேண்டும் என கோரிக்கை ஒன்றையும் வைத்துள்ளார்.