மாஸ் ஓப்பனிங்... கடைசி படத்தில் கல்லாகட்டிய உதயநிதி! மாமன்னன் படத்தின் முதல் நாள் வசூலே இத்தனை கோடியா?
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகி இருக்கும் மாமன்னன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.
maamannan
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமாகி விஜய், சூர்யா, கமல் போன்ற பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்த உதயநிதி ஸ்டாலின், பின்னர் ஹீரோவாக களமிறங்கினார். ஓகே ஓகே படத்தில் தொடங்கிய அவரது பயணம் மாமன்னன் படத்துடன் முடிவுக்கு வந்துள்ளது. அமைச்சராக பொறுப்பேற்றதால் மாமன்னன் தான் தனது கடைசி படம் என ஏற்கனவே அறிவித்த உதயநிதி, இனி சினிமா பக்கம் தலைகாட்ட வாய்ப்பில்ல ராஜா என சொல்லி விடைபெற்று உள்ளார்.
maamannan
உதயநிதியின் கடைசி படமான மாமன்னன் நேற்று உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை மாரி செல்வராஜ் தான் இயக்கி இருந்தார். இதில் உதயநிதி ஸ்டாலினுக்கு தந்தையாக வடிவேலு நடித்திருந்தார். மேலும் கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், லால் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. இப்படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் விதமாக ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார். படத்தின் பாடல்களைப் போல் பின்னணி இசைக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இதையும் படியுங்கள்... மாரி செல்வராஜ் சம்பவம் பண்ணினாரா? சலிப்படைய வைத்தாரா? - மாமன்னன் படத்தின் விமர்சனம் இதோ
maamannan
ரிலீசுக்கு முன் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்ட இயக்குனர் மாரி செல்வராஜை, ரிலீசுக்கு பின் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். படத்தில் சமூக நீதியை பற்றியும், சமத்துவம் பற்றியும் ஆழமாக பேசியுள்ள மாரி செல்வராஜுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அதோடு இப்படத்தில் வடிவேலுவின் நடிப்பும் அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது. இதுவரை காமெடி நடிகராகவே பார்த்து பழக்கப்பட்ட வடிவேலுவை டோட்டலாக மாற்றி அதில் இயக்குனர் வெற்றியும் கண்டுள்ளதாக கூறப்படுகிறது.
maamannan
மாமன்னன் திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தான் தயாரித்துள்ளது. இப்படம் தமிழகத்தில் சுமார் 700 திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டது. இதனால் உதயநிதியின் கெரியரில் இதுவரை இல்லாத அளவு முதல் நாள் கலெக்ஷன் இருக்கும் என்றும் கூறப்பட்டது. அதன்படியே மாமன்னன் படத்தின் முதல் நாள் வசூல் அமைந்துள்ளது. அதன்படி இப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ.6 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படியுங்கள்... இது என்ன உதயநிதிக்கு வந்த சோதனை? 'மாமன்னன்' படத்தை வைத்து ஸ்கோர் பண்ணும் அதிமுக! அன்றே ஜெ, செய்த தரமான சம்பவம்