MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • திருச்செந்தூரில் விஜய் விஷ்வரூப தரிசனம்... வெற்றி வேல் உடன் வலம் வந்த தளபதி

திருச்செந்தூரில் விஜய் விஷ்வரூப தரிசனம்... வெற்றி வேல் உடன் வலம் வந்த தளபதி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய், திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று அதிகாலை சாமி தரிசனம் செய்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 28 2026, 09:28 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Vijay Visit Tiruchendur Murugan Temple
Image Credit : X

Vijay Visit Tiruchendur Murugan Temple

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தேர்தல் பரப்புரை காரணமாக கடந்த சில வாரங்கள் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார். இதையடுத்து பிரச்சாரம் முடிந்து, தேர்தலும் நடைபெற்றது. கடந்த ஏப்ரல் 23-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு தமிழ்நாட்டில் ஆட்சியை பிடித்து முதல்வர் நாற்காலியில் அமரும் கனவோடு இருக்கிறார் விஜய். திராவிட கட்சிகளுக்கு விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று முதற்கட்ட கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்தன.

24
விஜய்யை காண குவிந்த மக்கள்
Image Credit : X

விஜய்யை காண குவிந்த மக்கள்

இதனிடைய தவெக தலைவர் விஜய் நேற்று திடீரென கிளம்பி திருச்செந்தூர் சென்றார். இரவு 11 மணிக்கு தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து மதுரைக்கு சென்ற விஜய், அங்கிருந்து சாலை மார்கமாக திருச்செந்தூர் சென்றார். விஜய் திருச்செந்தூர் வரும் செய்து காட்டுத்தீ போல் பரவியதால், நள்ளிரவிலும் அவரைப் பார்க்க வழிநெடுகிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. வரும் போதே பட்டு வேட்டி சட்டை அணிந்து வந்திருந்த விஜய், நேராக திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றார்.

Related Articles

Related image1
Vijay : 2 + 1 திட்டம்.. 234ல் எத்தனை சீட் வெற்றி? விஜய் கைக்கு வந்த ரிப்போர்ட்
Related image2
மனைவிக்கு ரூ.12.60 கோடி கடன் கொடுத்த விவகாரம்... விஜய் மீதான வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு
34
விஷ்வரூப தரிசனம்
Image Credit : X

விஷ்வரூப தரிசனம்

கோவிலுக்கு வந்த நடிகர் விஜய்யை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நள்ளிரவில் கோவிலில் கூடி இருந்தனர். பின்னர் நேரடியாக கோவிலுக்குள் அழைத்து செல்லப்பட்ட விஜய், அதிகாலை விஷ்வரூப தரிசனத்தில் கலந்துகொண்டார். கோவில் நிர்வாகம் சார்பாக விஜய்க்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. இதையடுத்து கையில் வேலோடு விஜய் கடற்கரைக்கு சென்று வழிபாடு நடத்தினார். அதன்பின்னர் அங்கு கூடி இருந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு காரில் கிளம்பிச் சென்றார் விஜய்.

44
பரிசாக வழங்கப்பட்ட வேல்
Image Credit : X

பரிசாக வழங்கப்பட்ட வேல்

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டி திருச்செந்தூருக்கு விசிட் அடித்த விஜய்க்கு கோவில் நிர்வாகம் சார்பில் வெற்றி வேல் பரிசாக வழங்கப்பட்டது. நடிகர் விஜய் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தது இதுவே முதன்முறை ஆகும். கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் தூத்துக்குடி விமான நிலையம் வந்த விஜய், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார். விஜய்யின் இந்த திடீர் விஜயத்தால் திருச்செந்தூரே ஸ்தம்பித்துப் போனது. அங்கு எடுத்த வீடியோக்களும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டிவி.கே. விஜய்
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
அடுத்தடுத்து 3 முக்கிய சீரியல்களை இழுத்து மூடும் சன் டிவி... அதிர்ச்சியில் ரசிகர்கள்
Recommended image2
ஜோதிடம் பயமுறுத்தும் கலையா? நடிகர் தாமு சொல்லும் Astrology ரகசியம்.!
Recommended image3
தனுஷுடன் நடிக்கும் மெகா சான்ஸ்.. கடைசி நேரத்தில் சைத்ரா ஆச்சாருக்கு நேர்ந்த ஏமாற்றம்! காரணம் இதுதானா?
Related Stories
Recommended image1
Vijay : 2 + 1 திட்டம்.. 234ல் எத்தனை சீட் வெற்றி? விஜய் கைக்கு வந்த ரிப்போர்ட்
Recommended image2
மனைவிக்கு ரூ.12.60 கோடி கடன் கொடுத்த விவகாரம்... விஜய் மீதான வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved