MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Vijay : 2 + 1 திட்டம்.. 234ல் எத்தனை சீட் வெற்றி? விஜய் கைக்கு வந்த ரிப்போர்ட்

Vijay : 2 + 1 திட்டம்.. 234ல் எத்தனை சீட் வெற்றி? விஜய் கைக்கு வந்த ரிப்போர்ட்

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவடைய உள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக தவெக உருவெடுக்கும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

2 Min read
Author : Raghupati R
Published : Apr 27 2026, 04:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
விஜய்க்கு வந்த ரிப்போர்ட்
Image Credit : Google

விஜய்க்கு வந்த ரிப்போர்ட்

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்த நிலையில், அரசியல் வட்டாரங்கள் முழுவதும் எதிர்பார்ப்பு சூடுபிடித்துள்ளது. யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற கேள்வி இன்று பதிலின்றி இருந்தாலும், அனைத்து கட்சிகளும் தங்களது வெற்றியை உறுதியாகக் கூறும் சூழல் நிலவுகிறது. குறிப்பாக, முதல் முறையாக களமிறங்கிய நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் (தவெக) எந்த அளவுக்கு தாக்கம் செலுத்தியுள்ளது என்பது தற்போது அதிகம் பேசப்படும் விஷயமாக உள்ளது.

25
ஒவ்வொரு தொகுதியிலும் முன்னணி
Image Credit : Google

ஒவ்வொரு தொகுதியிலும் முன்னணி

முன்னோட்டக் கருத்துக்கணிப்புகள் திமுக மற்றும் அதிமுக இடையே நேரடிப் போட்டி எனக் காட்டினாலும், தவெக பெறும் வாக்குகள் பல தொகுதிகளில் மாறக்கூடும் என்ற கருத்து பரவி வருகிறது. ஒவ்வொரு தொகுதியிலும் 15 முதல் 20 ஆயிரம் வரை வாக்குகள் கிடைக்கும் என்ற கணிப்புகள், முக்கிய கட்சிகளின் வெற்றி–தோல்வியை தீர்மானிக்கும் காரணி என அரசியல் ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.

Related Articles

Related image1
Now Playing
முதல்வர் யார் என்பதை தீர்மானிக்கும் விஜய்.. சிக்கலில் திமுக, அதிமுக..! தவெகவின் மாஸ்டர் பிளான்
Related image2
மனைவிக்கு ரூ.12.60 கோடி கடன் கொடுத்த விவகாரம்... விஜய் மீதான வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு
35
சமீபத்தில் நடைபெற்ற மீட்டிங்
Image Credit : Google

சமீபத்தில் நடைபெற்ற மீட்டிங்

இந்த சூழலில், விஜய் தனது கட்சி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் செயல்படுகிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் கட்சி அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், வாக்குப்பதிவு சதவீதம், மக்களின் மனநிலை மற்றும் கட்சிக்கான ஆதரவு போன்ற அம்சங்களை விரிவாக ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. மாநிலம் முழுவதும் பதிவான அதிக வாக்குப்பதிவு, மாற்றத்தை நாடும் மனநிலையை வெளிப்படுத்துகிறது என்று அவர் கருதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

45
அமைச்சரவைக்கு தயாராகும் தவெக
Image Credit : Google

அமைச்சரவைக்கு தயாராகும் தவெக

இந்த நம்பிக்கையின் பின்னணியில், ஆட்சி அமைப்பதற்கான சாத்தியத்தை கருத்தில் கொண்டு அமைச்சரவை அமைப்புக்கான பட்டியலும் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. இதேவேளை, சமூக ஊடகங்களில் தவெக வேட்பாளர்கள் பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகக் கூறும் போஸ்டர்களும் வைரலாகி வருகின்றன. பெரம்பூர் மற்றும் திருப்போரூர் உள்ளிட்ட இடங்களில் பெரிய வித்தியாசத்தில் வெற்றி எனப் பரவும் தகவல்கள் அரசியல் சூழலை மேலும் பரபரப்பாக்கி உள்ளது.

55
விஜயின் பிளான்
Image Credit : X

விஜயின் பிளான்

மொத்தம் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட தவெக, சில இடங்களில் சுயேட்சை வேட்பாளர்களுக்கும் ஆதரவு அளித்துள்ளது. இத்தேர்தலில் தமிழகத்தில் சுமார் 85 சதவீதம் வாக்குப்பதிவு பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த அதிக வாக்குப்பதிவுக்கு தவெக காரணமாக இருந்ததாகவும் கருத்துக்கள் வெளியாகின்றன. இந்த அனைத்து கணிப்புகளும் உண்மையாவதா என்பது மே 4ம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகள் தான் தெளிவாகும்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விஜய் (நடிகர்)
தமிழக வெற்றி கழகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்...கூட்டணியின் எதிர்காலம் என்ன?
Recommended image2
தமிழ்நாட்டில் ஒரு மினி மாலத்தீவு... வெறும் 300 ரூபாயில் சுற்றிப்பார்க்கலாம் - மிஸ் பண்ணிடாதீங்க..!
Recommended image3
Richest Villages In Tamil Nadu: இந்தியாவையே வியக்க வைக்கும் தமிழகத்தின் பணக்கார கிராமங்கள்..!
Related Stories
Recommended image1
Now Playing
முதல்வர் யார் என்பதை தீர்மானிக்கும் விஜய்.. சிக்கலில் திமுக, அதிமுக..! தவெகவின் மாஸ்டர் பிளான்
Recommended image2
மனைவிக்கு ரூ.12.60 கோடி கடன் கொடுத்த விவகாரம்... விஜய் மீதான வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved