ஏன் விஜய்க்கு போட்டியா நான் இருக்கக்கூடாதா?... வாய்விட்டு மாட்டிக்கொண்டு பாதியில் ஓடிய TTF வாசன்
TTF வாசன் செய்துவரும் சர்ச்சைக்குரிய விஷயங்கள் பற்றி கேள்வி எழுப்பப்பட்டதால் பதிலளிக்க முடியாமல் திணறிய அவர் பேட்டி ஒன்றில் இருந்து பாதியிலேயே கிளம்பி சென்றுள்ளார்.
சினிமா பிரபலங்களுக்கு மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு பெயரும் புகழும் கிடைக்கிறதோ, அதே அளவு வரவேற்பு யூடியூப் பிரபலங்களுக்கும் கிடைத்து வருகிறது. அப்படி கிடைக்கும் பெயரையும், புகழையும் அவர்கள் சரியாக பயன்படுத்துகிறார்களா என்று கேட்டால் அது சந்தேகம் தான். அப்படி யூடியூப் மூலம் பல லட்சம் பாலோவர்களை வைத்திருப்பவர் தான் TTF வாசன்.
இவர் பைக் ஓட்டும் வீடியோக்களை பதிவிட்டு யூடியூப் மூலம் சம்பாதித்து வருகிறார். அதில் இவருக்கு 33 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்களும் இருக்கிறார்கள். இந்த அளவு இவர் ரீச் ஆனதற்கு காரணம் இவர் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வீடியோக்களை பதிவிடுவது தான். அதிவேகமாக பைக் ஓட்டுவது, கைவிட்டுக்கொண்டு சாகசம் செய்வது என பல்வேறு சர்ச்சைக்குரிய வீடியோக்களை பதிவிட்டு இளைஞர்களை தவறாக வழிநடத்தி வருவதாக இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன.
சமீபத்தில் கூட பிக்பாஸ் பிரபலம் ஜிபி முத்துவை பைக்கில் உட்கார வைத்துக்கொண்டு, அதிவேகமாக பைக்கில் சென்ற காரணத்தால் TTF வாசன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த கேஸ் தொடர்பாக கோர்ட்டில் ஆஜராகும்போது கூட ஏதோ விருது வாங்க செல்வது போல் கோர்ட் சூட்டில் வந்து அதை வீடியோவாக வெளியிட்டது மிகவும் சர்ச்சையை கிளப்பியது.
இதையும் படியுங்கள்... இந்தி தெரியாதுனு சொன்னேன்... அவமானப்படுத்திட்டாங்க - மதுரை ஏர்போர்ட்டில் நடிகர் சித்தார்த்துக்கு நடந்த கொடுமை
இவர் தனது பிறந்தநாளையொட்டி ரசிகர்களை சந்திக்க ஏற்பாடு செய்திருந்தார். அப்போது அளவுக்கு அதிகமாக கூடிய ரசிகர்களுடன் செல்பியும் எடுத்திருந்தார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் அவர் விஜய்க்கு போட்டியாக அவர் இவ்வாறு செய்து வருவதாக ஒப்பிட்டு பேசி வந்தனர். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் இதுகுறித்த கேள்வி TTF வாசனிடம் முன்வைக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர் ஏன் நானெல்லாம் விஜய்க்கு போட்டியாக இருக்கக்கூடாதா என கேட்டுள்ளார். இப்படி வசமாக வாய்விட்டு மாட்டிக்கொண்ட TTF வாசனை விஜய் ரசிகர்கள் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அந்த பேட்டியில் தொடர்ந்து அவர் செய்துவரும் சர்ச்சைக்குரிய விஷயங்கள் பற்றி கேள்வி எழுப்பப்பட்டதால் பதிலளிக்க முடியாமல் திணறிய TTF வாசன், அதிலிருந்து பாதியிலேயே எழுந்து சென்றுவிட்டார்.
இதையும் படியுங்கள்... தென்காசி சாலையில் பைக் ரைடிங் செய்த அஜித்... சேஸ் பண்ணி வந்து ரசிகர்கள் எடுத்த வேறலெவல் வீடியோ இதோ