தலைநகரத்தில் சோழர் படை...! விமானத்தின் முன் பொன்னியின் செல்வன் டீம் நடத்திய மாஸ் போட்டோஷூட் இதோ
பொன்னியின் செல்வன் 2 படத்தின் புரமோஷனுக்காக டெல்லி சென்றுள்ள படக்குழு, அங்கு விமான நிலையத்தில் நடத்திய போட்டோஷூட் வைரலாகி வருகிறது.
பொன்னியின் செல்வன் 2 படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால், அப்படத்தின் புரமோஷன் பணிகளும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளன. அதன்படி முதலில் சென்னையில் இருந்து புரமோஷன் பணிகளை தொடங்கிய படக்குழு, கடந்த சனிக்கிழமை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த ஆந்தம் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டனர். அப்போது பொன்னியின் செல்வன் 2 படத்துக்காக ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த ஆந்தம் பாடல் ரிலீஸ் செய்தனர்.
இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை கோயம்புத்தூர் சென்ற படக்குழு அங்கு சரவணம்பட்டியில் நடைபெற்ற பிரம்மாண்டமான புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அவர்களை வரவேற்க அங்கு ஏராளமான ரசிகர்களும் வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அங்கிருந்து சென்னை வந்த பொன்னியின் செல்வன் படக்குழு நேற்று நடந்த பிரஸ்மீட்டில் கலந்துகொண்டு, பத்திரிகையாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தனர்.
இதையும் படியுங்கள்... இன்னும் கல்யாணமே ஆகல... அதற்குள் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த இலியானா - ‘எப்புட்ரா’ என ஷாக் ஆன ரசிகர்கள்
அடுத்தபடியாக தற்போது பொன்னியின் செல்வன் படக்குழு இன்று இந்தியாவின் தலைநகரமான டெல்லிக்கு படையெடுத்துள்ளனர். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு சென்ற படக்குழு, அங்கு விமான நிலையத்தில் இறங்கிய உடன் விமானத்தின் முன் மாஸாக போட்டோஷூட் ஒன்றையும் நடத்தி உள்ளனர். அதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றனர்.
கார்த்தி - ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் - திரிஷா, சோபிதா - ஜெயம் ரவி ஆகியோர் ஜோடியாக நடந்து வந்து விமானத்தின் முன் மாஸாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இதையடுத்து இன்று டெல்லியில் உள்ள ஸ்ரீராம் கல்லூரியில் நடைபெறும் பொன்னியின் செல்வன் 2 படத்துக்கான புரமோஷனில் கலந்துகொண்டனர். பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் வருகிற ஏப்ரல் 28-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... IPL 2023: சிஎஸ்கே போட்டிக்கு கேப்டன் மில்லர் கெட்டப்பில் வந்திருந்த தனுஷ்; வைரலாகும் புகைப்படம்!