இன்னும் கல்யாணமே ஆகல... அதற்குள் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த இலியானா - ‘எப்புட்ரா’ என ஷாக் ஆன ரசிகர்கள்
நடிகை இலியானா தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகிப் போய் உள்ளனர்.
நடிகை இலியானா, கடந்த 2006-ம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த கேடி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். இதையடுத்து கோலிவுட்டில் பெரியளவில் பட வாய்ப்புகள் கிடைக்காததால் டோலிவுட் பக்கம் சென்ற இலியானா, அங்கு அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். இதையடுத்து கடந்த 2012-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த நண்பன் படம் மூலம் தமிழில் ரீ-எண்ட்ரி கொடுத்தார் இலியானா.
ஷங்கர் இயக்கத்தில் வெளியான நண்பன் படம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றாலும், இலியானாவுக்கு அடுத்தடுத்து தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் கோலிவுட்டுக்கு டாடா காட்டிவிட்டு பாலிவுட் பக்கம் சென்ற அவர், அங்கு கவர்ச்சி வேடங்களில் நடித்து அடுத்தடுத்த பட வாய்ப்புகலையும் தட்டித்தூக்கினார். தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் இலியானா. இவர் நடிப்பில் கடைசியாக பிக் புல் என்கிற பாலிவுட் படம் வந்தது. தற்போது அன்ஃபேர் அண்ட் லவ்லி என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
நடிகை இலியானா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்படக் கலைஞரான ஆண்ட்ரூ என்பவரை காதலித்து வந்தார். அவருடன் லிவ்விங் டுகெதராக வாழ்ந்து வந்த இலியானா, அவரை திருமணம் செய்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்துவிட்டார்.
இதையும் படியுங்கள்... IPL 2023: சிஎஸ்கே போட்டிக்கு கேப்டன் மில்லர் கெட்டப்பில் வந்திருந்த தனுஷ்; வைரலாகும் புகைப்படம்!
இதன்பின்னர் நடிகை கத்ரீனா கைஃபின் சகோதரர் செபாஸ்டியனை இலியானா காதலித்து வருவதாக கூறப்பட்டது. இவர்கள் இருவரும் மாலத்தீவில் ஜோடியாக டேட்டிங் செய்த புகைப்படங்களும் வெளியாகி வைரலாகின. ஆனால் அதுகுறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வந்தார் இலியானா.
இந்நிலையில், நடிகை இலியானா தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார். இன்ஸ்டாகிராமில் 2 புகைப்படங்களை பதிவிட்டு, அதில் ஒன்றில் குட்டிக் குழந்தையின் டீசர்ட்டில் சாதனைப் பயணம் ஆரம்பமாகிவிட்டது என கேப்ஷன் கொடுக்கப்பட்டு இருந்தது. மற்றொரு புகைப்படத்தில் மம்மா என்கிற செயினை கழுத்தி அணிந்தபடி இருக்கிறார் இலியானா. மேலும் அந்த பதிவில் விரைவில் வரவுள்ள என்னுடைய குட்டி டார்லிங்கை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என குறிப்பிட்டு இருந்தார் இலியானா.
இலியானாவின் இந்தப் பதிவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் நெட்டிசன்களோ, முதலில் உங்கள் கணவர் யார் என்று சொல்லுங்கள் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... வயசானாலும் கும்முனு இருக்கனா... ‘சவுண்டு சரோஜா’வாக மாறி ஆபாசமாக மெசேஜ் அனுப்பியவரை டார் டாராக கிழித்த ஐஸ்வர்யா