52 வயசாகுது; நான் கும்முனு இருக்கேனா! ‘சவுண்டு சரோஜா’வாக மாறி ஆபாச மெசேஜ் அனுப்பியவரை வெளுத்துவாங்கிய ஐஸ்வர்யா
சமூக வலைதளத்தை தவறாக பயன்படுத்தி, தனக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய நபர்களை நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன் டார் டாராக கிழித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகையாக வலம் வந்தவர் லட்சுமி. இவரின் மகள் ஐஸ்வர்யா பாஸ்கரனும் சினிமாவில் நடித்திருக்கிறார். நியாயங்கள் ஜெயிக்கட்டும் என்கிற படம்மூலம் தமிழில் அறிமுகமான நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன், பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான ராசுக்குட்டி படம் மூலம் தான் பிரபலமானார். இதையடுத்து ரஜினியுடன் எஜமான், கமலுடன் பஞ்சதந்திரம் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களிலும் நடித்திருந்தார் ஐஸ்வர்யா.
நடிகை ஐஸ்வர்யாவுக்கு பெயர் வாங்கி கொடுத்த படங்களில் சூர்யாவின் ஆறு படமும் ஒன்று. ஹரி இயக்கத்தில் வெளியான இப்படத்தின் சவுண்டு சரோஜா என்கிற கேரக்டரில் நடித்திருந்தார் ஐஸ்வர்யா பாஸ்கரன். இந்த கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆனதோடு அவரை சவுண்டு சரோஜா என அழைக்கும் அளவுக்கு மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தது. தற்போது படங்களில் அம்மா கேரக்டரில் நடித்து வரும் ஐஸ்வர்யா, சீரியல்களிலும் பணியாற்றி வருகிறார்.
இதுதவிர சொந்தமாக சோப் வியாபாரமும் செய்து வருகிறார். இதற்காக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி, அதில் தான் விற்பனை செய்யும் சோப் மற்றும் அழகு சாதன பொருட்களை விளம்பரப்படுத்தி வருகிறார். இந்நிலையில், தனக்கு சோசியல் மீடியாவில் வரும் ஆபாச மெசேஜ்களை பார்த்து டென்ஷன் ஆன ஐஸ்வர்யா, ரியல் சவுண்டு சரோஜாவாக மாறி அவ்வாறு மெசேஜ் அனுப்பிய நபர்களின் விவரங்களை யூடியூப்பில் வெளியிட்டு அவர்களை டார் டாராக கிழித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... சோழர்களைப் பற்றி படம் எடுத்துட்டு தஞ்சாவூர் பக்கமே போகாதது ஏன்? - உண்மையை போட்டுடைத்த பொன்னியின் செல்வன் டீம்
இதுகுறித்து அவர் கூறியதாவது : சோப் ஆர்டர்களை பெறுவதற்காக சோசியல் மீடியாவில் எனது வாட்ஸ் அப் நம்பரை பகிர்ந்திருந்தேன். அதை தவறாக பயன்படுத்தும் சிலர் எனக்கு தொடர்ந்து ஆபாச மெசேஜ்களை அனுப்புகிறார்கள். இதைப்பற்றி பேசவேண்டாம் என்று தான் இருந்தேன். ஆனால் என் மகள் தான், நீ கண்டிப்பா இத பத்தி பேசியே ஆகணும்னு சொன்னா.
அந்த நபர் அனுப்பிய மெசேஜையும் படித்துக்காட்டினார் ஐஸ்வர்யா. அதில், நான் உன்ன வாங்கலாம்னு இருக்கேன், வயசானாலும் கும்முனு இருக்கனு ஒருவர் அனுப்பிய மெசேஜை படித்த ஐஸ்வர்யா, டேய் பண்ணி, போய் உங்க அம்மாகிட்ட இந்த டயலாக் லாம் சொல்லுடா எனக்கூறி காரித் துப்பியுள்ளார். அதுமட்டுமின்றி ஒருவர் தனக்கு அவருடைய அந்தரங்க பாகங்களை போட்டோ எடுத்து அனுப்பியதாகவும் அதெல்லாம் பார்த்து எனக்கு வாந்தி தான் வந்தது என மிகுந்த மன வருத்ததுடன் கூறியுள்ளார்.
இதுபோன்று ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய நபர்களின் புகைப்படங்களையும் அந்த வீடியோவில் வெளியிட்டிருக்கிறார் ஐஸ்வர்யா. அதில் ராதாகிருஷ்ணன் என்ற நபர், இரவு 11 மணிக்கு மேல் மெசேஜ் அனுப்பி பர்சனலா வீட்டுக்கு வந்து சோப்பை பார்க்கனும்னு கேட்டாராம். புருஷன் இல்லாம ஒரு பெண் தனியாக வாழ்ந்தால் இப்படி தான் கேட்பிங்களா, செருப்பு பிஞ்சிரும் என வெளுத்து வாங்கி உள்ளார் ஐஸ்வர்யா பாஸ்கரன்.
இதையும் படியுங்கள்... திருமணம் எப்போது..? ஒற்றை புகைப்படத்தை கூலாக வெளியிட்டு உண்மையை உடைத்த கீர்த்தி சுரேஷ்!