MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சினிமா மீதான காதலை வெளிப்படுத்த நடிகை திரிஷா குத்திய டாட்டூ - அதுவும் அந்த இடத்திலா..!

சினிமா மீதான காதலை வெளிப்படுத்த நடிகை திரிஷா குத்திய டாட்டூ - அதுவும் அந்த இடத்திலா..!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா, சினிமா மீதான காதலை வெளிப்படுத்தும் விதமாக குத்தியுள்ள டாட்டூவின் புகைப்படம் வெளியாகி உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 20 2023, 09:12 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. 40 வயதை நெருங்கிவிட்டாலும், இளமை ததும்ப அழகு தேவதையாக காட்சியளிக்கும் நடிகை திரிஷாவுக்கு சினிமாவில் பட வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் உள்ளன. திரிஷா நடிப்பில் தற்போது பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் தயாராகி உள்ளது. இப்படம் வருகிற ஏப்ரல் 28-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இதற்கான புரமோஷன் பணிகளில் தற்போது பிசியாக உள்ளார் திரிஷா.

24

இதுதவிர லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் உருவாகும் லியோ படத்தையும் கைவசம் வைத்துள்ளார் திரிஷா. இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார் திரிஷா. கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கு பின் இந்த ஜோடி மீண்டும் இணைந்துள்ளதால், இப்படத்திற்கு ரசிகர்கள் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும் தி ரோடு என்கிற படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார் திரிஷா.

இதையும் படியுங்கள்... ஆசையோடு காத்திருந்த அட்லீ... அம்போனு விட்டுட்டு போன விஜய்! ‘தளபதி 68’ பட இயக்குனர் திடீரென மாற்றப்பட்டது ஏன்?

34

இப்படி பிசியான நடிகையாக வலம் வரும் திரிஷாவுக்கு டாட்டூ மீது அதீத பிரியம் உண்டு. அதனால் தனக்கு பிடித்தவற்றை டாட்டூவாக போட்டுக்கொள்வார். அந்த வகையில் நெஞ்சில் நெமோ என்கிற மீனை டாட்டூவாக போட்டுள்ள திரிஷா, கையில் தனது ராசியின் சின்னத்தை டாட்டூவாக குத்தி உள்ளார். இந்த இரு டாட்டூக்களை பலரும் பார்த்திருக்கக்கூடும். ஆனால் அவர் போட்டுள்ள மற்றொரு டாட்டூ தான் ஹைலைட்டானது.

44

அதன்படி சினிமா மீது தனக்குள்ள காதலை வெளிப்படுத்தும் விதமாக தனது முதுகில் டிரைபாடு உடன் கூடிய கேமரா மற்றும் கிளாப் போர்டு ஆகியவற்றை டாட்டூவாக குத்தி உள்ளார். அவர் இந்த டாட்டூவை கடந்த 2016-ம் ஆண்டே போட்டுக்கொண்டாலும் பெரியளவில் இதுகுறித்த புகைப்படங்கள் வெளியானதில்லை. நடிகை திரிஷா குத்திக் கொண்ட டாட்டூக்களிலே இது தான் பெரியது. தற்போது பொன்னியின் செல்வன் பட புரமோஷனின் போது எடுத்த புகைப்படங்களில் திரிஷாவின் டிரைபாடு கேமரா டாட்டூவை பார்த்து வியந்து அதனை வைரலாக்கி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... தமிழ்த் திரையுலகம் உலக அரங்கில் பெரும் அலைகளை உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளது: கார்த்தி பெருமிதம்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
திரிஷா

Latest Videos
Recommended Stories
Recommended image1
எதிர்நீச்சல் 2: ஆதி குணசேகரனின் ஆட்டம் க்ளோஸ்? ஜனனியின் மாஸ் ரீ-என்ட்ரி! நிலைகுலைந்து போன ஏ.ஜி!
Recommended image2
"பாரதி கண்ணம்மா" புகழ், ரோஷினிக்கு ரகசிய திருமணம்.! மணமகன் யார் தெரியுமா?
Recommended image3
மாயாஜாலம் செய்த 'வான் நிலா' பாட்டு! எழுதியதும் மெட்டுப் போட்டதும் யார் தெரியுமா?! காதலர்களின் இதயத் துடிப்பாய் மாறிய ஒரு பாடலின் கதை.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved