- Home
- Cinema
- ஆசையோடு காத்திருந்த அட்லீ... அம்போனு விட்டுட்டு போன விஜய்! ‘தளபதி 68’ பட இயக்குனர் திடீரென மாற்றப்பட்டது ஏன்?
ஆசையோடு காத்திருந்த அட்லீ... அம்போனு விட்டுட்டு போன விஜய்! ‘தளபதி 68’ பட இயக்குனர் திடீரென மாற்றப்பட்டது ஏன்?
லியோ படத்திற்கு பின் நடிகர் விஜய் நடிக்க உள்ள தளபதி 68 படத்தை அட்லீ இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகி பிளாக்பஸ்டர் ஹிட்டானதை அடுத்து தற்போது அவர் லியோ படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லியோ படத்தின் ஷூட்டிங்கே இன்னும் முடிவடையாத நிலையில், தற்போதே விஜய் அடுத்ததாக நடிக்க உள்ள தளபதி 68 படத்தின் இயக்குனர் யார் என பேச்சு அடிபட தொடங்கிவிட்டது.
முதலில் தளபதி 68 படத்தை அட்லீ தான் இயக்குவார் என கூறப்பட்டு வந்தது. தற்போது ஷாருக்கானின் ஜவான் பட பணிகளில் பிசியாக இருக்கும் அட்லீ அப்படம் ஜூன் மாதம் ரிலீஸ் ஆன பின் தளபதி 68 படத்தின் வேலைகளை தொடங்குவார் என்றெல்லாம் செய்திகள் உலா வந்தன. அதுமட்டுமின்றி அட்லீ - விஜய் கூட்டணியில் உருவாகும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க இருப்பதாகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த நிலையில், கடந்த சில தினங்களாக கோலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக பேசப்படும் விஷயம் என்னவென்றால், தளபதி 68 இயக்குனர் அட்லீ இல்லை என்பது தான். அட்லீக்கு பதிலாக தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் மலினேனிக்கு நடிகர் விஜய் வாய்ப்பளித்துள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன் இயக்குனர் கோபிசந்த் மலினேனியை சந்தித்ததாகவும் அப்போது அவர் சொன்ன மாஸ் ஸ்டோரி நடிகர் விஜய்யை வெகுவாக கவர்ந்துவிட்டதாம். இதனால் அவருக்கு தன் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை விஜய் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... நம்பிய தோழி ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. நம்பிக்கை துரோகம் செய்தாரா ஸ்ருதி? தனுஷுடனான டேட்டிங் குறித்து நச் பதில்!
கோபிசந்த் மலினேனி தெலுங்கில் பல்வேறு கமர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். சமீபத்தில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்து ஹிட் ஆன வீரசிம்ஹா ரெட்டி திரைப்படமும் அவர் இயக்கியது தான். விஜய் - கோபிசந்த் இணையும் படத்தை தெலுங்கில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தில் நடிக்க நடிகர் விஜய்க்கு ரூ.135 கோடி சம்பளமாக வழங்கப்பட இருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது.
விஜய் தெலுங்கு இயக்குனர்களுக்கு முன்னுரிமை தருவது ஏன்?
நடிகர் விஜய்யின் பார்வை சமீப காலமாக தெலுங்கு திரையுலகம் பக்கம் திரும்பி உள்ளது. அண்மையில் தான் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கிய வாரிசு படத்தில் நடித்தார். அப்படம் நேரடி தெலுங்கு படம் போல் ரிலீசாகி சக்கைப்போடு போட்டது. இதனால் அங்கு தனக்குள்ள மார்க்கெட்டை மேலும் வலுவாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளாராம் விஜய். இதனால் தான் டோலிவுட் இயக்குனர்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறாராம் விஜய். அதுமட்டுமின்றி தமிழ் தயாரிப்பாளர்களை விட தெலுங்கு தயாரிப்பாளர்கள் சம்பளத்தை வாரி வழங்குவதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... மாளவிகா மோகனனை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்! உடல் மெலிந்து ஒல்லி குச்சிபோல் போல் மாறிட்டாரே? வைரல் போட்டோஸ்!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.