- Home
- Cinema
- ஒருவழியாக ரிலீசுக்கு தயாரானது.. திரிஷா, அரவிந்த் சாமி நடித்த சதுரங்க வேட்டை 2 - எப்போ திரைக்கு வருது தெரியுமா?
ஒருவழியாக ரிலீசுக்கு தயாரானது.. திரிஷா, அரவிந்த் சாமி நடித்த சதுரங்க வேட்டை 2 - எப்போ திரைக்கு வருது தெரியுமா?
sathuranga vettai 2 : சலீம் பட இயக்குனர் நிர்மல் குமார் இயக்கத்தில் அரவிந்த் சாமி, திரிஷா நடிப்பில் உருவாகி நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்த சதுரங்க வேட்டை 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஹெச். வினோத் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு ரிலீசான படம் சதுரங்க வேட்டை. நட்டி நட்ராஜ் நாயகனாக நடித்திருந்த இப்படம் குறைந்த முதலீட்டில் எடுக்கப்பட்டு வசூலை வாரிக்குவித்தது. இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது அதன் கதைக்களம் தான். பணத்தாசை காட்டி சாமானிய மக்களை நூதன முறையில் ஏமாற்றும் கும்பலை பற்றி இப்படத்தில் வெளிச்சம்போட்டு காட்டி இருந்தனர்.
இப்படத்தின் வெற்றி இயக்குனர் ஹெச்.வினோத்தின் கெரியரில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதையடுத்து கார்த்தியை வைத்து தீரன் அதிகாரம் ஒன்று, அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை, ஏகே 61 என குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குனராக உயர்ந்துவிட்டார். இதனிடையே கடந்த 2017-ம் ஆண்டு சதுரங்க வேட்டை படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதையும் படியுங்கள்... Neelima : உங்க உள்ளாடை சைஸ் என்ன... கொச்சையாக கேள்வி கேட்ட நபருக்கு செருப்படி பதில் அளித்த நடிகை நீலிமா
பிற படங்களில் பிசியான காரணத்தால் இப்படத்தை ஹெச்.வினோத் இயக்க முடியாத சூழல் உருவானது. இதனால் சலீம் பட இயக்குனர் நிர்மல் குமார் இயக்கும் பொறுப்பை ஏற்றார். ஆனால் கதை மட்டும் ஹெச்.வினோத் எழுதி இருந்தார். மேலும் அரவிந்த் சாமி நாயகனாகவும், திரிஷா நாயகியாகவும் நடித்து இருக்கிறார்.
பல ஆண்டுகளுக்கு முன்னரே எடுத்து முடிக்கப்பட்ட இப்படம் பைனான்ஸ் பிரச்சனை காரணமாக ரிலீசாகாமல் இருந்தது. இந்நிலையில், பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு தற்போது இப்படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. அதன்படி இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 7-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... பாதுகாப்பா இருந்தும் கொரோனா வந்திருச்சு... தனிமைப்படுத்திக் கொண்டு வீடியோ வெளியிட்ட வரலட்சுமி சரத்குமார்