MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • யூடியூப்பில் அதிக வியூஸ்களை வாரிசுருட்டிய டாப் 5 தமிழ் பாடல்கள் என்னென்ன?

யூடியூப்பில் அதிக வியூஸ்களை வாரிசுருட்டிய டாப் 5 தமிழ் பாடல்கள் என்னென்ன?

யூடியூப்பில் சினிமா பாடல்கள் அதிகம் பார்க்கப்படும் நிலையில், அதில் அதிக வியூஸ் அள்ளிய பாடல்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம். இந்த பட்டியலில் விஜய் மற்றும் தனுஷ் பாடல்கள் தான் லீடிங்கில் உள்ளன.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 09 2026, 02:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Top 5 Most Viewed Tamil Songs on Youtube
Image Credit : X

Top 5 Most Viewed Tamil Songs on Youtube

மக்கள் பெரும்பாலும் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் யூடியூப்பும் ஒன்று. அதில் திரைப்பிரபலங்களின் பேட்டி, சினிமா விமர்சனங்கள், சினிமா பாடல்கள் உள்பட ஏராளமான வீடியோக்களுடன் நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாக யூடியூப் மாறி உள்ளது. சினிமா பாடல்கள் பெரும்பாலும் யூடியூப் வாயிலாக தான் பார்க்கப்படுகிறது. இதனால் அதன்மூலம் கிடைக்கும் வியூஸ் அடிப்படையில், பல்வேறு பாடல்கள் சாதனை படைத்துள்ளன. அந்த வகையில் தமிழ் சினிமா பாடல்களில் யூடியூப்பில் அதிக வியூஸ் அள்ளிய பாடல்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

26
5. வாத்தி கம்மிங்
Image Credit : X

5. வாத்தி கம்மிங்

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு திரைக்கு வந்த படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்திற்கு அனிருத் தான் இசையமைத்து இருந்தார். மாஸ்டர் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அப்படத்தின் பாடல்கள் அமைந்திருந்தன. அதில் இடம்பெற்ற எல்லாப் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தாலும், வைரல் ஹிட்டான பாடல் என்றால் அது வாத்தி கம்மிங் பாடல் தான். இப்பாடல் அதிகம் பார்க்கப்பட்ட பாடல்கள் பட்டியலில் 5-ம் இடத்தில் உள்ளது. இப்பாடலுக்கு யூடியூப்பில் சுமார் 57 கோடி வியூஸ் கிடைத்துள்ளது.

Related Articles

Related image1
ஒரே பாடலில் 17 மொழிகள்... விஜய்-க்காக மதன் கார்க்கி எழுதிய மாஸ்டர் பீஸ் பாடல் பற்றி தெரியுமா?
Related image2
இசையால் சவால் விட்ட யுவன்… வரிகளால் அதிர வைத்த வாலி..! மங்காத்தா பட பாடல் உருவான கதை
36
4. கொலவெறி பாடல்
Image Credit : X

4. கொலவெறி பாடல்

யூடியூப் மூலம் வைரல் ஹிட் அடித்த பாடல்களில் ஒய் திஸ் கொலவெறி பாடலும் ஒன்று. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த 3 திரைப்படத்தில் தான் இப்பாடல் இடம்பெற்று இருந்தது. இதற்கும் அனிருத் தான் இசையமைத்து இருந்தார். இப்பாடல் கடந்த 2011-ம் ஆண்டு யூடியூப்பில் வெளியாகி உலகளவில் அதிரிபுதிரி ஹிட் அடித்தது. சொல்லப்போனால் இந்தியர்கள் மத்தியில் யூடியூப் பிரபலமானதற்கு இந்த பாடலும் ஒரு முக்கிய காரணம். இப்பாடலுக்கு லிரிக்ஸ் எழுதியது மட்டுமின்றி, தனுஷே தன் சொந்த குரலில் பாடியும் இருந்தார். இப்பாடலுக்கு யூடியூப்பில் தற்போது வரை 58 கோடி வியூஸ் கிடைத்துள்ளது.

46
3. டம் டம் பாடல்
Image Credit : X

3. டம் டம் பாடல்

நடிகர் விஷால் நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு திரைக்கு வந்த படம் எனிமி. இப்படத்திற்கு தமன் இசையமைத்து இருந்தார். இப்படம் ஹிட்டாகாவிட்டாலும் இதில் இடம்பெற்ற டம் டம் பாடல் அடிபொலி ஹிட் அடித்தது. இப்பாடலில் மிருணாளினியின் நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இன்றளவும் தமிழ்நாட்டில் நடைபெறும் பெரும்பாலான திருமணங்களில் இப்பாடல் இடம்பெற்றுவிடும். அந்த அளவுக்கு செம ரீச் ஆனது. இப்பாடல் தற்போது வரை யூடியூப்பில் 71 கோடி பார்வைகளை பெற்று இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது.

56
 2. அரபிக் குத்து
Image Credit : X

2. அரபிக் குத்து

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு திரைக்கு வந்த படம் பீஸ்ட். நெல்சன் திலீப் குமார் இயக்கிய இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். இப்படத்திற்கும் அனிருத் தான் இசையமைத்து இருந்தார். இப்படம் பிளாப் ஆனாலும் இதில் இடம்பெற்ற பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டாகின. அதிலும் அரேபிய மொழியில் உருவான அரபிக் குத்து பாடல் செம வைரல் ஆனது. அப்பாடல் வரிகளை சிவகார்த்திகேயன் எழுதி இருந்தார். அப்பாடலின் வீடியோ யூடியூப்பில் இதுவரை 78 கோடி பார்வைகளை பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

66
1. ரெளடி பேபி
Image Credit : X

1. ரெளடி பேபி

யூடியூப்பில் அதிக பார்வைகளை பெற்ற பாடல்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது ரெளடி பேபி பாடல் தான். இப்பாடல் தனுஷ் ஹீரோவாக நடித்த மாரி 2 படத்தில் இடம்பெற்று இருந்தது. இப்பாடலுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். இப்பாடலுக்கு தனுஷ் உடன் சேர்ந்து சாய் பல்லவி போட்ட குத்தாட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால், இன்றளவும் யூடியூப்பில் அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறது ரெளடி பேபி. இப்பாடலுக்கு பிரபுதேவா தான் நடன இயக்குனராக பணியாற்றி இருந்தார். இப்பாடல் யூடியூப்பில் தற்போது வரை 173 கோடி பார்வைகளைப் பெற்றிருக்கிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
புஷ்பா 3 முதல் ராக்கா வரை.... அல்லு அர்ஜுன் கைவசம் உள்ள அரை டஜன் படங்கள் என்னென்ன? முழு லிஸ்ட் இதோ
Recommended image2
ஸ்மிருதி மந்தனா - பலாஷ் முச்சால் ஜோடிக்கு விரைவில் திருமணமா? காட்டுத்தீ போல் பரவும் வீடியோ
Recommended image3
விரைவில் அரங்கேறும் மித்ரா- மகேஷ் திருமணம்? அன்புவின் மாஸ் சபதத்தால் அதிர்ச்சியில் குடும்பத்தினர்!
Related Stories
Recommended image1
ஒரே பாடலில் 17 மொழிகள்... விஜய்-க்காக மதன் கார்க்கி எழுதிய மாஸ்டர் பீஸ் பாடல் பற்றி தெரியுமா?
Recommended image2
இசையால் சவால் விட்ட யுவன்… வரிகளால் அதிர வைத்த வாலி..! மங்காத்தா பட பாடல் உருவான கதை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved