MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இசையால் சவால் விட்ட யுவன்… வரிகளால் அதிர வைத்த வாலி..! மங்காத்தா பட பாடல் உருவான கதை

இசையால் சவால் விட்ட யுவன்… வரிகளால் அதிர வைத்த வாலி..! மங்காத்தா பட பாடல் உருவான கதை

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா போட்ட கஷ்டமான ட்யூனுக்கு, கவிஞர் வாலி கொடுத்த தரமான பாடல் வரிகள் செம ஹிட் அடித்துள்ளன. அதைப்பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 06 2026, 12:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
secret Behind Mankatha song
Image Credit : X

secret Behind Mankatha song

தமிழ் சினிமாவின் மிகப் பெரிய மியூசிக் ஃபேமிலியில் பிறந்தவர் யுவன் சங்கர் ராஜா. தந்தை இளையராஜா வழியாக வந்த இசை ஆர்வம், தன்னுடைய தனித்துவ ஸ்டைலில் தொடர்ந்து கொண்டு வருகிறார். குடும்பத்தில் இருந்த பலரும் கலைத்துறையில் சாதனை படைத்தவர்களாக இருந்தாலும், யுவன் தனது தனி அடையாளத்தை உருவாக்கி கோலிவுட்டில் முன்னணி இசையமைப்பாளராக திகழ்கிறார். நடிகர்கள் சரத்குமார் மற்றும் பார்த்திபன் நடித்த அரவிந்தன் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அவர், இன்று இளைஞர்களின் ‘மியூசிக் ஐகான்’ ஆக வளர்ந்துள்ளார்.

24
மங்காத்தா பட பாடல் உருவான விதம்
Image Credit : Google

மங்காத்தா பட பாடல் உருவான விதம்

ஒருகாலத்தில் இளையராஜாவின் இசை ரசிகர்களை மயக்கியது போல, இன்றைய தலைமுறையை யுவனின் பாடல்கள் கட்டிப்போட்டுள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை. இயக்குனர் வெங்கட் பிரபு உடன் யுவனின் கூட்டணி தனித்துவமான ஒன்று. சென்னை 28 முதல் சமீபத்திய கோட் வரை, பெரும்பாலான படங்களில் இந்த கூட்டணி ரசிகர்களுக்கு மறக்க முடியாத இசையை வழங்கியுள்ளது. யுவனின் கெரியரில் மிக முக்கியமான படமாக அமைந்தது மங்காத்தா. அஜித் குமார் நடித்த இந்த படம் இன்றளவும் ரசிகர்களின் ஃபேவரிட் லிஸ்டில் உள்ளது. இது அஜித் குமாரின் 50வது திரைப்படமாகும்.

Related Articles

Related image1
அனிருத், ஏ.ஆர்.ரகுமான், யுவன் சாதனைகளை முறியடித்த சாய் அபயங்கர்!
Related image2
8 வயதில் யுவன் போட்ட ட்யூன்; நைஸாக காப்பியடித்து இளையராஜா போட்ட ஹிட் பாட்டு
34
யுவன் போட்ட டஃப் டியூன்
Image Credit : Google

யுவன் போட்ட டஃப் டியூன்

இப்படத்தின் வெற்றிக்கு யுவனின் சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்களும் முக்கிய காரணம். இதில் இடம்பெற்ற வாடா பின்லேடா, மச்சி ஓபன் தி பாட்டில், என் நண்பனே போன்ற பாடல்கள் இன்னும் வைப்ஸ் கொடுக்கும் ஹிட்ஸாக இருக்கின்றன. இந்த படத்தின் பாடல்களுக்கு வரிகள் எழுதியவர் வாலி. குறிப்பாக “என் நண்பனே என்னை ஏய்த்தாய்” பாடலின் பின்னணி கதையே ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் உள்ளது. மிகவும் வேகமான மற்றும் சிக்கலான டியூனை யுவன் அமைத்தபோது, இதற்கு எப்படி வரிகள் எழுதுவது என்கிற சந்தேகம் அவருக்கே இருந்ததாக கூறப்படுகிறது.

44
வாலியின் மேஜிக்
Image Credit : Facebook

வாலியின் மேஜிக்

ஆனால் அனுபவம் பேசும் இடத்தில் சவால் எதுவும் இல்லை என்பதுபோல, வாலி அந்த டியூனுக்கேற்ற வகையில் ஒரே ஓட்டத்தில் வரிகளை உருவாக்கி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். குறிப்பாக பாடலின் ஆரம்ப வரிகள் கூட டியூனின் வேகத்தையும் உணர்ச்சியையும் சரியாகப் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இசை, வரிகள், உணர்ச்சி என இந்த மூன்றின் கலவையாக உருவான அந்த பாடல் இன்று வரை ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்துக் கொண்டிருப்பது தான் அந்த கூட்டணியின் வெற்றியைச் சொல்கிறது. வாலி தன்னை ஜீனியஸ் என நிரூபித்த பாடல்களில் இதுவும் ஒன்று. இந்தப் பாடல்களை எழுதுவதற்காக கவிஞர் வாலிக்கு மிகப்பெரிய தொகையை சம்பளமாக கொடுத்திருக்கிறார் வெங்கட்பிரபு. இதை கவிஞர் வாலியே ஒரு நேர்காணலில் கூறி இருந்தார். என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
யுவன் சங்கர் ராஜா

Latest Videos
Recommended Stories
Recommended image1
LIK முதல் தாய் கிழவி வரை... ஏப்ரல் 10ந் தேதி தியேட்டர் & ஓடிடியில் கோடை விருந்தாக வர உள்ள படங்கள் என்னென்ன?
Recommended image2
Leader Day 3 Box Office : லட்சங்களில் இருந்து கோடிகளுக்கு தாவிய லீடர்... வசூலில் தூள் கிளப்பிய அண்ணாச்சி..!
Recommended image3
குணசேகரனை மாட்டிவிட ஜனனியோடு கூட்டு சேரும் அறிவுக்கரசி... எதிர்பாரா திருப்பங்களுடன் எதிர்நீச்சல் தொடர்கிறது
Related Stories
Recommended image1
அனிருத், ஏ.ஆர்.ரகுமான், யுவன் சாதனைகளை முறியடித்த சாய் அபயங்கர்!
Recommended image2
8 வயதில் யுவன் போட்ட ட்யூன்; நைஸாக காப்பியடித்து இளையராஜா போட்ட ஹிட் பாட்டு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved