MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • ஸ்மிருதி மந்தனா - பலாஷ் முச்சால் ஜோடிக்கு விரைவில் திருமணமா? காட்டுத்தீ போல் பரவும் வீடியோ

ஸ்மிருதி மந்தனா - பலாஷ் முச்சால் ஜோடிக்கு விரைவில் திருமணமா? காட்டுத்தீ போல் பரவும் வீடியோ

கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, இசையமைப்பாளர் பலாஷ் முச்சால் ஜோடிக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. அதன் பின்னணியை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 09 2026, 12:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Smriti Mandhana and Palash Muchhal Family Meeting Video viral
Image Credit : stockPhoto

Smriti Mandhana and Palash Muchhal Family Meeting Video viral

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி நட்சத்திரமாக திகழும் ஸ்மிருதி மந்தனா, மகாராஷ்டிராவை சேர்ந்தவர். சமீபத்தில் நடைபெற்ற மகளிர் உலகக்கோப்பையில் இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய பங்கு வகித்தார். தனிப்பட்ட வாழ்க்கையில், இந்தி இசையமைப்பாளர் பலாஷ் முச்சல் உடன் நீண்டநாளாக காதலில் இருந்த ஸ்மிருதி, அண்மையில் அவருடன் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் கடந்த ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி நடைபெற இருந்தது.

இதனிடையே, கல்யாணத்துக்கு சில தினங்கள் முன்னர் ஸ்மிருதி மந்தனாவின் தந்தை ஸ்ரீநிவாஸ் மந்தனாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சாங்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசரமாக அனுமதிக்கப்பட்டார். இந்த எதிர்பாராத சூழ்நிலையால் நவம்பர் 23ந் தேதி நடைபெறவிருந்த திருமணத்தை ஸ்மிருதி மந்தனா ரத்து செய்தார்.

25
பரவிய வதந்தி
Image Credit : Instagram

பரவிய வதந்தி

ஸ்மிருதி மந்தனாவுடனான திருமணம் நின்ற பிறகு, பலாஷ் முச்சால் ஒரு நடன இயக்குநருடன் தொடர்பில் இருந்ததாக வதந்திகள் பரவின. இதனால் அவர் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானார். திருமணம் ரத்து செய்யப்பட்டதை அறிவித்த பிறகு, தவறான வதந்திகளைப் பரப்புபவர்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார். 'ஆதாரமற்ற வதந்திகளின் அடிப்படையில் யாரையும் மதிப்பிடும் முன் நாம் சிந்திக்க வேண்டும். அவதூறு பரப்புவோர் மீது என் குழு சட்ட நடவடிக்கை எடுக்கும். இந்த கடினமான நேரத்தில் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி' என்று அவர் கூறி இருந்தார்.

Related Articles

Related image1
சர்வதேச கிரிக்கெட்டில் அசாத்திய சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா.. சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்
Related image2
ஸ்மிருதி மந்தனா-பலாஷ் முச்சல் திருமணம் ரத்து..! அதிகாரப்பூர்வமாக அறிவித்த மந்தனா..! இதுதான் காரணம்!
35
வைரல் வீடியோ
Image Credit : insta/smriti_mandhana

வைரல் வீடியோ

இதனிடையே ஸ்மிருதி மந்தனாவின் தந்தை பலாஷ் முச்சாலின் சகோதரி பாலக் முச்சாலை ஒரு ரெஸ்டாரண்டில் சந்தித்து பேசிய வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகின. அந்த வீடியோவில் பாலக், ஸ்மிருதி தந்தை காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறார். இதைப்பார்த்த நெட்டிசன்கள். ஸ்மிருதிக்கும், பலாஷுக்கு மீண்டும் திருமணம் நடைபெற இருக்கிறதா என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒரு சிலரோ இது பழைய வீடியோவாக இருக்கும் என கூறி வருகின்றனர். இந்த வீடியோ பற்றி இருதரப்பினரும் இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bollywood pap king (@bollywoodpapking)

45
பலாஷ் முச்சால் அறிக்கை
Image Credit : Instagram

பலாஷ் முச்சால் அறிக்கை

முன்னதாக அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்ட பலாஷ் முச்சால், ரத்து செய்யப்பட்ட இந்தத் திருமணத்தை தனது வாழ்க்கையின் மிகவும் சவாலான கட்டம் என்று விவரித்தார். இந்த உறவிலிருந்து விலகும் தனது முடிவை அவர் உறுதிப்படுத்தினார். 'உண்மையை சரிபார்க்காமல், வதந்திகளின் அடிப்படையில் மற்றவர்களை மதிப்பிடுவதை' மக்கள் நிறுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். 'இந்த உறவிலிருந்து நான் விலகுகிறேன். இது என் வாழ்வின் கடினமான கட்டம். இதை நான் கண்ணியத்துடன் எதிர்கொள்வேன்' என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

55
ஸ்மிருதியின் பதிவு
Image Credit : Instagram

ஸ்மிருதியின் பதிவு

பல யூகங்களுக்கு மத்தியில், இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, பலாஷ் முச்சாலுடனான தனது திருமணம் குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன் மௌனம் கலைத்தார். தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், திருமணம் ரத்து செய்யப்பட்டதை அவர் உறுதிப்படுத்தினார். இந்த நேரத்தில் தங்கள் இரு குடும்பங்களின் தனிப்பட்ட உரிமையை மதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். 'என் வாழ்க்கை பற்றி பல யூகங்கள் வந்தன. பலாஷுடனான என் திருமணம் ரத்து செய்யப்பட்டது. இந்த விஷயத்தை இத்துடன் முடிக்க விரும்புகிறேன். என் கவனம் எப்போதும் நாட்டுக்காக விளையாடுவதில்தான் இருக்கும்' என்று மந்தனா கூறி இருந்தார். முச்சால் ஏமாற்றியதாக வரும் குற்றச்சாட்டுகளை அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விளையாட்டு

Latest Videos
Recommended Stories
Recommended image1
IPL 2026: கடைசி ஓவர் த்ரில்... 106 மீட்டர் சிக்ஸர் அடித்தும் மில்லரால் காப்பாற்ற முடியாத டெல்லி!
Recommended image2
இந்தியாவின் டாப் 5 ஸ்பின்னர்கள் யார் யார் தெரியுமா? முழு லிஸ்ட் இதோ!
Recommended image3
CSK vs DC: வேஸ்ட் லக்கேஜ்.. இளம் வீரர் நீக்கம்.. 'சிக்சர்' மன்னன் உள்ளே.. சிஎஸ்கே பிளேயிங் லெவன் இதோ!
Related Stories
Recommended image1
சர்வதேச கிரிக்கெட்டில் அசாத்திய சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா.. சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்
Recommended image2
ஸ்மிருதி மந்தனா-பலாஷ் முச்சல் திருமணம் ரத்து..! அதிகாரப்பூர்வமாக அறிவித்த மந்தனா..! இதுதான் காரணம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved