இந்திய கிரிக்கெட் அணியில் பல்வேறு ஸ்பின்னர்கள் கோலோச்சியுள்ளனர். சர்வதேச போட்டிகளில் கலக்கிய இந்தியாவின் டாப் 5 ஸ்பின்னர்கள் குறித்து பார்ப்போம்.
sports-cricket Apr 08 2026
Author: Rayar r Image Credits:Getty
Tamil
அனில் கும்ப்ளே NO.1
இந்தியாவில் மிகச்சிறந்த ஸ்பின்னரான அனில் கும்ப்ளே, 401 போட்டிகளில் 953 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மொத்தம் 37 முறை ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
Image credits: x/icc
Tamil
2. ரவிச்சந்திரன் அஷ்வின்
தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், 287 சர்வதேச போட்டிகளில் 765 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 11 முறை தொடர் நாயகன் விருது வென்று கலக்கியுள்ளார்.
Image credits: ANI
Tamil
3. ஹர்பஜன் சிங்
ஹர்பஜன் சிங், 365 சர்வதேச போட்டிகளில் 707 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். தனது கிரிக்கெட் வாழ்வில் 19 முறை நான்கு விக்கெட்டுகளையும், 28 முறை ஐந்து விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
Image credits: Getty
Tamil
4. ரவீந்திர ஜடேஜா
உலகின் நம்பர் 1 டெஸ்ட் ஆல்-ரவுண்டரான ஜடேஜா, 373 போட்டிகளில் 634 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 29.70 என்ற பந்துவீச்சு சராசரியுடன் அசத்தி வருகிறார்
Image credits: AFP
Tamil
5. குல்தீப் யாதவ்
சைனாமேன் ஸ்பின்னர் குல்தீப் யாதவ், 191 போட்டிகளில் 335 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் 16 முறை நான்கு விக்கெட்டுகளையும், 9 முறை ஐந்து விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.