Tamil

இந்தியா-ஆஸி 2வது ஓடிஐயில் மறக்க முடியாத 5 தருணங்கள்

அடிலெய்டில் நடந்த 2வது ஓடிஐயில் ஆஸ்திரேேலியா 2 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இந்த போட்டியில் நடந்த 5 முக்கியமான தருணங்களை பார்க்கலாம்.

Tamil

தொடர்ந்து 17வது டாஸை இழந்த இந்தியா

ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய கேப்டன்களுக்கு டாஸ் சாதகமாக அமையவில்லை. அடிலெய்டிலும் அதுவே நடந்தது. இந்திய அணி தொடர்ந்து 17வது முறையாக டாஸ் தோற்றது.

Image credits: insta/indiancricketteam
Tamil

விராட் கோலி டக் அவுட்

விராட் கோலி இந்த தொடரில் தொடர்ந்து இரண்டாவது முறையாக டக் அவுட் ஆனார். அவரது ஒருநாள் போட்டி வாழ்க்கையில், தொடர்ச்சியாக 2 முறை டக் அவுட் ஆனது இதுவே முதல் முறை.

Image credits: X/Cricket with Ansh
Tamil

ரோஹித் சர்மாவின் அதிரடி பேட்டிங்

அடிலெய்டில் இதுவரை ரோஹித் சர்மாவின் ரெக்கார்ட் சிறப்பாக இல்லை. ஆனால் இந்தப் போட்டியில் அவரது பேட் பேசியது, 73 ரன்கள் குவித்தார். அவர் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடித்தார்.

Image credits: stockPhoto
Tamil

3 கேட்ச்களை தவறவிட்ட இந்திய ஃபீல்டர்கள்

தோல்விக்கு கேட்ச்களை தவறவிட்டது ஒரு முக்கிய காரணம். முகமது சிராஜ், அக்சர் படேல், நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் உட்பட இந்திய வீரர்கள் மொத்தம் 3 கேட்ச்களை தவறவிட்டனர்.

Image credits: X
Tamil

துருவ் ஜூரலின் ஜெர்சியை அணிந்த சுப்மன் கில்

ஃபீல்டிங்கின் போது, இந்திய கேப்டன் சுப்மன் கில், துருவ் ஜூரலின் ஜெர்சியை அணிந்திருந்தார். இந்த தருணம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவரது கேப்டன்சியும் சுமாராகவே இருந்தது.

Image credits: insta/indiancricketteam

IND vs 2nd ODI: அடிலெய்டில் அதிக ரன்கள் குவித்த டாப் 5 இந்திய பேட்ஸ்மேன்கள்!

மகளிர் உலகக் கோப்பை! அதிக சிக்ஸர்க‌ள் அடித்த டாப் 5 வீராங்கனைகள்!

விலை உயர்ந்த வீடுகளை வைத்திருக்கும் டாப் 10 இந்திய வீரர்கள்!

14 வயது சிக்சர் மன்னன் வைபவ் சூர்யவன்ஷி! சிக்சரில் புதிய சாதனை!